பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிபோர் கேன்ஆ 33 பக்குவமெய்ஞ் ஞானியென உலகம் போற்றும் ாரதியைக் கண்டுமகிழ் பேறு பெற்றோன்; மிக்கதலுங் கலைத்தமிழ்நூல் ஒன்று கூடி வெண்ணிறு புனைந்ததென விளங்கும் சான்றோன்; தக்கதிரு வாசகத்தை மூன்று போதும் தலைதாழ்த்திப் பணிந்திடுவோன்; எங்கள் ராய சொக்கலிங்கம் எனப்பெயர்கொள் தமிழ்க்க டற்குச் சொல்விருந்தாம் இச்சிறுநூல் உரிமை வாகும். என்ற பாடல் மூலம் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். இதற்கு முன்னர் வெளிவந்த கவிங்கத்துப்பரணி ஆராய்ச்சி (மார்ச் - 195 என்னும் நூலுக்குத் தமிழ்க்கடல் அறிமுகம்’ என்ற தலைப்பில் 'அணிந்துரை ஒன்று வழங்கி ஆசி கூறியுள்ளார். அது கம்பன் அடிப்டொடிக்கு அன்புப் படையலாக்கப் பெத்துள்ளது. இக்காலத்தில் இராய.சொ. இரண்டாண்டுக் காலம் (1982-84 காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் ஆராய்ச்சித் துறைப் பேராசிரியராகப் பணி புரித்தார். வள்ளல் அழகப்பரின் கனவை அறக்கட்டளை நிறுவனத்தின் செயலராக இருந்த திரு க.வெ.சித. வெ. வேங்கடாசலம் செட்டியார் நனவாக்கினார். இந்த இரண்டாண்டுக் காலம் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர் குடியிருப்பிலுள்ள இல்லம் ஒன்றில் வாழ்ந்தார். தான் காரைக்குடி வந்திருந்தபோது, இப்பெரும் புலவரை இந்த இல்லத்தில் சந்தித்து, அளவளாவினதாக நினைவு. நினைவு - 7: தமிழ்ப் பேராசிரியராக இருந்தபோதோ அதற்குச் சற்றுப் பின்னரோ அறக்கட்டளை நிறுவனத்தின் செயலராக இருந்த வேங்கடாசலம் செட்டியாருடன் திருத்தலப் பயணத்தை மேற்கொண்டு சைவ வைணவ வேறுபாடின்றி எல்லாத் திருக்கோவில்களையும் சேவித்தார். இக்காலத்தில் நான் குடும்பத்தைத் திருப்பதிக்குக் கொண்டு. போய் விட்டேன். அப்போது என் பிஎச்.டி ஆய்வுக்கு நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தை ஆய்வுப் பொருளாகக்