பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பித்த நூல்கள் நூல்கனைப் பதிப்பித்தல் எளிய செயல் அன்று. அதுவும் ஓலைச் சுவடிகளில் உள்ளவற்றை அச்சிற்குக் கொண்டு வருதல் என்பது ஓர் இமாலயப் பெருஞ்செயல்: அசுவமேத வேள்வி செய்தலை ஒத்தது. இதில் முயன்று வெற்றி கண்டவர் மகாமகோபாத்தியாயர் உ.வே. சாமிநாத அய்யர். அவருக்கு 'மகாமகோபாத்தியாயர் என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்ததை நினைத்து சிறப்பித்துப் பாடிப் போற்றுகின்றார் - மூன்று பாடல்களில் பாரதியார். செம்பரிதி ஒளிபெற்றான்; பைந்நறவு சுவைபெற்றுத் திகழ்ந்தது; ஆங்கண் உம்பரெலாம் இறவாமை பெற்றனர்என்று எவர்கொல்இங்கு உவத்தல் செய்வார் ? கும்பமுனி எனத்தோன்றும் சாமிநா தப்புலவன் குறைவில் கீர்த்தி பம்பலுறப் பெற்றனரேல், இதற்கென்சொல் பேருவகை படைக்கின்றீரே. (1) அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி அறியாதார் இன்றெம்மை ஆள்வோ ரேனும் பன்னியகீர் மகாமகோ பாத்தியா யப்பதவி பரிவின் ஈந்து பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா தன்றனக்குப் புகழ்செய் வாரேல்