பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பித்த நூல்கன் 38 பெறுகின்றன. இத்தாலுக்குத் திருந்திய பதிப்பு இதுகாறும் இல்லை. இக்குறைகனை நீக்கிப் பதிப்பித்துள்ளார் தமிழ்க்கடல் இராய.சொ. அவர்கள். மடல் - விளக்கம்: மடலேறுதல், மடலு:குதல் என்பன அகப்பொருள் துறைகளுள் ஒன்று. காமம் காழ்க்கொள்ளும் காலத்தில் ஆடவன் தன் மார்பில் எலும்பு மாலையையும் தலையில் எருக்கம் பூ மாலையையும் சூடிக்கொண்டு பனங் கருக்காற் செய்யப்பெற்ற குதிரைமேல் ஏறித் தெருவில் வலம் வருவது மடலேறுதல் அல்லது மடலூருதல் ஆகும். தான் காதலிக்கும் மங்கையின் படத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பான். ஆடவன் மகளிரைக் குறித்து மடலேறலேயன்றிப் பெண் ஆடவனைக் குறித்து மடலுாரல் ஆகாது என்று தமிழ் நெறியில் விதிக்கப் பெற்ற ஒரு வரம்பாகும்." எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல் பொற்புடை நெறிம்ை இன்மை யான” என்பது தொல்காப்பியம். பன்னிரு பாட்டியலும் இதனை வழிமொழிகின்றது இரண்டு சூத்திரங்களால்' இம் முறையில் ஆடவன் தான் காதலிக்கும் மங்கையை அடைதல் இறுதியான வழி. பெரியோர்கள் தலையிட்டுப் பெற்றோர்களை இணங்கச் செய்து திருமணத்தை முடித்து st}{S}}.{#-#ff. மடலூர்தல்பற்றி வள்ளுவப் பெருந்தகையும் ஆறு குறள்களில் குறிப்பிட்டுள்ளார். இப்பெருமகனாரும் மடலூருஞ் செயல் ஆண்களுக்கேயன்றிப் பெண்களுக்கு உரியதன்று என்று மொழிந்துள்ளார். 2. பன்னிரு பாட்டியல் - 145, 147 3. தொல்.பொருள். அகத்தினை - 38 இளம்) 4. பன்னிரு - பாட்டியல் - 146, 147 5. திருக்குறள் - காமத்துப்பால் - நானுத்துறவு உரைத்தல்.