பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பித்த நூல்கள் ! மடலூர எண்ணுகின்றார். இவர்தம் இகு மடல்களிலும் ஆழ்வார் நாயகி மடலூரத் துணிவதாகக் கூறப்பெறுகின்றது. இரண்டு கடல்களிலும் ஆழ்வார் நாயகி "மடலூர்வன், மடலூர்வன்' என்று சொல்லி அச்சமுறுத்துகின்றாசேயன்றி அச்செயலை முற்ற முடி: நடத்தினதாகக் கூறவில்லை. சிறிய திருமடலில், ஒர்ஆனைக் கொம்பொசித்து ஒர்ஆனை கோன்விடுத்து சீரானை, செங்கண் நெடியானைத் தேன்துழாய்த் தாரானைத் தாமரைபோல் கண்ணானை எண்னருஞ்சேர் பேரா யிரமும் பிதற்றிப் பெருந்தெருவே ஊரார் இகழினும் ஊராது ஒழியேன்தான் வாரார்பூம், பெண்ணை iñā-83. என்று கூறுவார். பெரிய திருமடலிலும், உலகறிய ஊர்வேன்நான் முன்னி முளைத்தெழுந்து ஓங்கி-ஒளிபடந்த மன்னியபூழ் பெண்ணை மடல். என்று உரைப்பர். இந்த இரண்டிலும் ஊரினதாகச் சான்றுகள் இல்லை. நம்மாழ்வார் பராங்குச நாயகி நிலையில் இம்மடலேறுதலைக் குறிப்பிடும்போது, தோழி! உலகு தோறலர் தூற்றிஆம் 7. சிறிய திருமடல் 8. பெரிய திருமடல்