பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பித்த நூல்கள் 43 மன்னும் ఢి வேண்டினோம். என்ற பெரிய திருமடல் பகுதியால் அறியலாம். ஆகவே தமிழ்க் கடலின் கருத்து பொருந்துமாறில்லை என்பது காட்டப்பெற்றது. - 'வருணகுலாதித்தன் மடல்’ என்ற இந்நூலில் வருண குலாதித்தனுக்குத் தான் காதலித்த நங்கையைப் பெறுவதற்கு மடலேறும் வழி தோன்றுகின்றது. இந்த வழியைச் சொன்ன வள்ளுவரை வாயார வாழ்த்து கின்றான். மடற்கோலம் பூண்டு அவள் திருவுரு எழுதி எடுத்து நாகையர் கோன் திருமுன்னர் அவன் தென்தாகைப் பதியின் திரு வீதியில் பனைக்குதிரை மடலேறத் துணிந்தேவிட்டான். பொதுவாகத் தமிழ் இலக்கியங்களில் மடலூர்வதாகச் சொல்லப்பெறுகின்றதேயொழிய ஊர்ந்து அதன் முடிவு கண்டதாகச் சொல்லப் பெறவில்லை. அதற்கு இலக்கியமும் இல்லை. 2. சோன சைல மாலை." சோன சைலம் என்பது தேயுத்தலம் ஆகிய திருவண்ணாமலைக்குரிய பெயர்களுள் ஒன்று. சோனம் - சிவப்பு: சைலம் - மலை. சோன சைல மலை என்பது திருவண்ணாமலை என்னும் சிறந்த சிவத் தலத்தைப்பற்றிய துதி நூல்களாகிய பிரபந்தங்கள் பலவற்றுள் ஒன்று. இது 100 எழுசீர் விருத்தங்களாலாகிய திருப்பாடல்களைக் கொண்டது. துறை மங்கலம் (பெரம்பலூருக்கு அருகில் உள்ளது) சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் வீரசைவப் பெருஞ்சான்றோர் இந்நூலை இயற்றியருளினார். இந்நூல் எளிய இனிய தெளிவான தீந்தமிழ் நடையில் சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை நலங்கள் நிறைந்து திகழ்வதாகும். 11. பெரிய திருமடல் 12. வெளியீடு: அருணாபேகவரர் கோயில், திருவண்ணாமலை