பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பித்த நூல்கன் 45 அடிகளார் செய்த நூல்களுள் மிகச்சிறப்பு வாய்த்தது நால்வர் நான்மணிமாலை, சமயக்குரவர் நால்வருக்கும் நான்கு மணிகள் விரவி நாற்பது பூக்களால் அழகிய மாலை தொடுத்தார். இந்நூலில் திருவாசக ஆசிரியர் மணிவாசகப் பெருமான்மேல் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டார். திருவா சகம்இங்கு ஒருகால் ஒதின் கருங்கல் மனமும் கரைந்துஉக, கண்கள் தொடுமணல் கேணியில் கரந்துநீர் பாடி, மெய்ம்மயிர் பொடிப்பு, விதிர்விதிர்ப்பு எய்தி, அன்பர் ஆகுநர் அன்றி அன்பதை உலகில் மற்றையர் இலரே. என, திருவாசகத்திற்கு உருகிய அடிகளார் நூாவின் இறுதியில் மணிவாசகப் பெருமானை விளித்து பாவெனப் படுவது உன்பாட்டு' என்று பகர்வார். இஃது எது போலவெனின்: உலகிலுள்ள மலர்கள் எல்லாம் பூக்கன் என்றாலும் திருமகள் தங்கியுள்ள தாமரையே 'பூ' என்று கூறுதல் போல, "பூவெனப்படுவது பொறிவாழ் பூவே" என்று போற்றுவார்.

  1. 3

சிவப்பிரகாச சுவாமிகள் வெங்கை” என்ற ஊருக்கு கோவை, கலம்பகம், உலா என மூன்று நூல்கள் செய்துள்ளார். இவ்வூரில் அடிகள் கட்டுவித்து வழிபட்ட பழைய சிவன் கோவில் உள்ளது. சுவாமிகளின் பாடல் காரணமாக நம் தமிழ்க்கடல் இரண்டு முறை அவ்வூர் சென்று வணங்கி வந்ததாக அவர் தரும் குறிப்பால் அறிய முடிகின்றது. சிவப்பிரகாச அடிகள் நகைச்சுவை மிக்க தனிப் பாடல்கள் சில அருளியுள்ளார்கள். அவற்றில் ஒன்று. அரனவன் இடத்திலே ஐங்கரன் வந்துதான் ‘ஐயஎன் செவியை மிகவும் 13. இப்போது வெங்கனூர் என வழங்குவது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது.