பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பித்த நூல்கள் 47 அவ்வுரையும் சேர்ந்து முன்னே அச்சாகியுள்ளது. அப்பதிப்பு இன்று கிடைத்தற்கு அரிதாகவுள்ளது. அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் விருப்பத்திற்கு இசையத் தமிழ்க்கடல் அப்புராணத்தை உரையுடன் வெளியிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இறைபணி எதுவானாலும் உவப்புடன் ஏற்றுக் கொள்வார்கள் தம் தமிழ்க்கடல். பலநூல்கள் இவளியிட்டுப் பழகிய இப்பெருமகனாருக்கு இப்பதிப்பு பருத்த தலைவலியைத் தந்துன்னது. அவரே கூறுவது: "இப்புராணத்தை வெளியிடுவதில் மிகவும் சிரமப்பட வேண்டியதாகி விட்டது. முந்திய பதிப்பிலுன்ன பிழைகளுக்கு எல்லையே இல்லை. அண்ணாமலையாரின் அடிமுடியைத் தேடி அறிவதைவிட, அப்புராணத்திலுள்ள பிழைகளைக் களைவது அரிதாகிவிட்டது. எனவேதான் எவ்வளவோ முயன்று திருத்தியும், பெரிய பிழை திருத்தம் போட வேண்டிய அவசியம் வந்துவிட்டது. யாப்பிற்குக் கட்டுப்படாமல் அச்சிடப்பெற்ற பழைய பாடல்களை யெல்லாம் பெரிதும் முயன்று திருத்தினோம். பழைய உரையில் இருந்த வடமொழித் தொடர்களைக் கணக்கிட முடியாது. கூடுமானவரைக் கருத்து வேறுபடாமல் பற்பல இடங்களில் நல்ல தமிழில் திருத்தம் செய்தேன்” என்பதாகும். - தலப்பெருமை: திருவண்ணாமலை, பெரியார்கள் பலராலும் பெரிதும் போற்றித் துதிக்கப் பெற்ற தலம். அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே! என்டர் சம்பந்தப்பெருமான். ஆதியே அமரர் கோவே அணிய்ணா மலையு ளானே" என்று கூறுவார் நாவுக்கரசர். 15. சம்ப தேவாரம் 1.10.1 16. அப்பர். தேவாரம் 4.63:1