பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பித்த நூல்கள் 49 அரோகரா’ என்ற முழக்கம் அத்தலத்தில் பெருகி வழங்கும். இப்புராணத்தில். 'அரிகர என்பது கடலில் முழங்கியது அருணை வளம்பதியே’ என்பதில் இச்செய்தி குறிக்கப் பெறுகின்றது. இங்ங்னம் அண்ணாமலை பெருஞ்சிறப்புடையது. இத்தலத்தின் சிறப்புகளை எல்லாம் விரித்துப் பாடியுள்ளார் இந்நூலாசிரியர். அனைத்தும் நல்ல இனிய பாடல்கள். திருவிளையாடற்புராணம், காஞ்சிப்புராணம், திருத் தணிகைப் புராணம் முதலிய பல புகழ் பெற்ற தல புராணங்களைப் போல, இப்புராணமும் தமிழறிஞர்களால் பெரிதும் போற்றிப் பாராட்டப் பெற்று வரும் புகழ்மிக்க சிறந்ததொரு தல புராணமாகும். சுவையான இடங்கள்: இப்புராணத்தில் சுவையான இடங்களில் சிலவற்றைக் கண்டு மகிழலாம். ( அவையடக்கத்தில் ஒர் அருமையான கருத்து. "புதிய தூலாக இதனைச் செய்துள்ளேன். பழைய நூல்கள் பல உன்னன. பழையவற்றைச் சிறப்பிப்பதும் என் நூல் புதியதென்று இகழ்ந்தும் யாரேனும் சொல்லக்கூடும். எட்டி மரம் வளர்ந்து பழையதாக நின்று கனி தருகிறது. அதில் இனிமை உண்டா? கரும்பு புதியது. அதற்குச் சுவை இல்லாமல் போகுமா? செய்யுளில் சுவையில் உயர்வு, இழிவு என்று பார்ப்பதையன்றிப் பழமை, புதுமை என்பதற்காகச் சிறப்பிப்பதோ இழித்துக் கூறுவதோ முறையாகாது" என்ற கருத்து அடங்கிய பாடல்: அழகுதரக் கனிந்தநச்சு மரம்பழைய - தெனினும்அதில் அமுதுண் டாமோ? விழைவுதரு சுவைக்கரும்பு புதியதுவே எனினும்அதில் இரதம் போமோ? 22. பாயிரம் - 4.