பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பித்த நூல்கள் 53 "வழிபடுவார்க்கு ஏற்றபடி அவர்கள் பூசைக்கு எனிய பிண்ட லிங்கமாகவும் எழுந்தருளவேண்டும்" என்று தேவர்கள் வேண்டிக் கொண்டார்கனாம். அண்டவிங்கத்துக்கு நடைபெறும் பூசையை இவ்வாசிரியர் சொல்லுகின்றார். 'அடுத்துஅருண கிரியானே ! உனக்குவிண்நீர் அலதுபுனல் ஆட்டுவார்யார்? தொடுத்தஉடுத் திரள் அலது திருமுடிக்கு மணிமாலை சூட்டு வார்யார்? கடுத்திகழும் மிடற்றானே : கதிர்கனன்றி மணித்தீபம் காட்டு வார்பார் ? எடுத்திறைஞ்கம் பூசைசெய்ய, இதன்கீழ்ஒர் இலிங்கவடி வெடுப்பாய் என்றார். என்ற பாடலில், {4} (அ) உவமை நயம்: திருவண்ணாமலையைச் சார்ந்த இடங்களில் தாம்புக் கயிற்றின் இரு துணிகளிலும் இரண்டு குடங்களைக் கட்டி ஒன்று கீழே சென்று மொள்ள மற்றொன்று மேலே இருக்க, மீட்டும் மேலிருப்பதைக் கீழிறங்கி மொள்ளச் செய்து கீழிருப்பதை மேல் ஏற்றித் தண்ணீர் எடுப் ார்கன். இந்த வழக்கத்தை நூலாசிரியர் ஒரு கவிதையில் உவமையாக்குகின்றார். சோதி மலையாய் நின்ற இறைவனை அன்னமும் பன்றியுமாக உருவெடுத்து முடியும் அடியும் தேட அயனும் மாலும் செல்வது முத்துக்குடமும் நீலமணிக் குடமும் மேலும் கீழும் போவதுபோல் இருந்ததாம். மெத்தும்,அரைக் கணத்தினுக்குஆ யிரம்காதம் பறந்தயனார் விரைந்து போனார் துத்திஅரா எடுத்தபுவி கணத்தினுக்கா யிரம்காதம் தொனைத்துப் போனார் அத்தகையோர் செயல்உரைக்கின், கனகமணி நெடும்பூட்டுக்கு அருகில் ஒடும்