பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ8 தமிழ்க்கடல் ராய.சொ பெரிய புராணம் தமிழில் தோன்றிய மூல நூல். கந்தபுராணம் மகாபுராணங்கள் பதினெட்டில் ஒன்றன் பகுதி, திருவிளையாடற்புராணம் என்பது மதுரைத் திருத்தலத்தில் இறைவன் செய்த 64 திருவிளையாடல்களை விரித்துச் சொல்வது, இஃது ஒரு தலத்தின் புராணம். சைவத் திருமுறைகளில் ஒன்றாக அமைந்த பெரிய புராணத் தோடும் காபுராணங்களில் ஒன்றாகிய கந்தபுராணத் தோடும் ஒரு திரலாக வைத்து எனணப் பெறும் பெருமை ஒரு தலபுராணத்துக்கு அமைந்ததற்கு அப்புராணத்தின் சிதப்பே காரணம், சிவத்தலங்களில் எல்லாம் சிறந்ததாக முன்வைத்து எண்ணப்பெறுவதும் அடையின்றியே கோயில் என்று சொல்லப்பெறுவதுமாகிய தில்லைக்குரிய புராணத்துக்குக் கூட இத்தகைய சிறப்பு இல்லை என்பது நீக நினைத்து நோக்கத்தக்கது. அடமொழியிலுள்ள தலபுராணங்களுக்கு இலக்கிய மதிப்புப் பெரும்பாலும் இல்லை. ஆனால் தமிழில் பல புலவர்கள் இயற்றிய தல புராணங்கள் சொற்கவை பொருட்கைை திசம்பியுள்ளனவாய்த் திகழ்கின்றன. திரிகட சசப்ட கவிராயர், சைவ எல்லப்பு நாவலர், சிவப்பிரகாச அடிகள், கச்சியப்ப முனிவர், பரஞ்சோதி முனிவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலிய பெரியார்கள் படைத்த தல புராணங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றன. பெரிய புராணம் பெரிய புராணம் வரலாற்று நூல். அந்தப் பெயர் புராணம் என்பதற்காக, அதனைத் தல புராண வரிசையில் சேர்க்கலாகாது. பெரியபுராணம் காவிய வரிசையில் சேர்க்கத்தக்கது. இவ்வுலகில் புகழொடு வாழ்ந்து செய்த அருஞ்செயல்கள் செய்த சிவனடியார் களின் வரலாறு கூறுவது பெரிய புராணம். அது அடியார்கள் திறம் கூறுவதில் ஈடு இணையற்றது. அந்நூல் முழுவதும் தெய்வமணம் கமழும் செய்யுட்களால் ஆனது.