பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பித்த துல்கள் 57 எனவே, அதற்கு ஒப்பற்ற தனி இடத்தை அளித்து விட்டு நோக்கும் போது, திருவிளையாடல் புராணம் முதல் இடம் பெறுகின்றது. மதுரைத் தலபுராணங்கள்: மதுரைத் தலத்திற்குரிய புராணங்கள் நான்கு அவை: (1 திருவாலவுடையார் திருவிளையாடற்புராணம். இஃது உத்தர மகாபுராணம் என்னும் வடநூலில் ஒரு பகுதியாகிய 'சார சமுச்சயம் என்பதிலிருந்து மொழியாக்கம் பெற்றது. இதனை இயற்றியவர் செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் தம்பி, இதனைப் பழைய திருவிளையாடல், வேம்பத்துசார் திருவிளையல் என்றும் வழங்குவர். டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் இந்துரலை நல்ல முறையில் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்கள். (2) கடம்பவன புராணம்: இலம்பூர் வீமநாத பண்டிதர் என்னும் புலவரால் வடமொழியில் உள்ள நீடாாண்க: மகாத்மியம் என்பதிலிருந்து மொழியாக்கம் செய்யப் பெற்றது. இந்நூலும் அச்சுவாகனம் ஏறியுள்ளது. (3) கந்தர பாண்டியம்: வாயற்பதியில் இருந்த அனதாரி என்னும் புலவர் பெருமானால் வடமொழியில் சுந்தா பாண்டியம் என்ற பெயரோடுள்ள நூல் மொழியாக்கம் பெற்றமைந்தது இந்த நூல். பதினாறாவது நூற்றாண்டில் தோன்றியது. அச்சில் வந்துள்ளது. (4) திருவிளையாடற் புராணம்: இந்நூலை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர். இதுவே தமிழுலகம் எங்கும் நன்கு பரவி வழங்கும் புராணம். மேற்கூறப்பெற்ற நூலகளுக் கெல்லாம் பின்னே தோன்றியதாகக் கருதுவர் அறிஞர்கள். காலத்தினால் பிற்பட்டதாக இருப்பிலும், முன்னே முளைத்த காதிலும் பின்னே முளைத்த கொம்பு வலிது என்றவாறு பக்திச் சுவையிலும் தமிழ் நயத்திலும் மற்றவற்றை விடச் சிறந்து திகழ்கின்றது.