பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பித்த நூல்கள் , 59 இந்த மதுரைக் காண்டத்தைச் சிறந்த முறையில் பதிப்பித்தவர் நம் தமிழ்க்கடல் இராய.சொ. அவர்கள். வெளியிட்டது மதுரை மீனாட்சி திருக்கோயில். இத்தலத் புராணத்துக்கு இணையான மற்றொன்று இல்லை என்பது நம் தமிழ்க் கடல் அவர்களின் தேர்ந்த முடிபு. முழு முதற் கடவுளாகிய சிவபெருமான் மதுரை நகரில் சங்கத் தலைவராக அமர்ந்து பெரும் புலவர்களோடு ஒன்றித் தமிழ் 级 '; ஆய்ந்தார் என்ற பெருமை மதுரையைத் தவிர வேறு எந்த ४: நகருக்கும் இல்லை. பரஞ்சோதி முனிவர், 'கண்ணு தற்பெருங் கடவுளுக் கழகமோடு அமர்ந்து பண்ணு தத்தெரிந்து ஆய்ந்தஇப் என்று பெருமிதமாகப் $ 'கண்ணுதற் பெருங்கடவுள்' என்ற கம்பனின் சொற்றொடரை இப்புலவர் ெ _f; * A ., ୱି! - :* : - பொன்னேபோல் போற்றியிருப்பது ஒரு சிறப்பு நால்வர் பற்றிய நான்கு வணக்கப் பாடல்கள், அதாவது கடிஅவிழ் கடுக்கை (!!), அறப்பெருஞ்செவ்வி' (20, "அரவு அகல அல்குலார் (21, எழுத அரும் மறைகள் (22) என்று தொடங்கும் பாடல்கள் மிக அருமையாக அமைந்திருப்பவை. தவிர, அங்கயற்கண்ணிபற்றி பங்கயற்கு அண்ண () என்று தொடங்கும் பாடலும் தடாதகை பற்றி 'செழியர் பிரான் (12 என்ற பாடலும், கூத்தபிரான் பற்றி 'உண்மை அறிவு (0) என்று தொடங்கும் பாடலும் சோமசுந்தார் பற்றி சடைமறைத்து (1 என்ற பாடலும் நம் நெஞ்சினை நெகிழ்வித்துப் பக்தியின் கொடுமுடிக்கு நம்மை இட்டுச் செல்பவை. மதுரை நகர்பற்றி முனிவர் பாடிய பாடல்கள் அனைத்தும் தித்திக்கும் தெள்ளமுதமாய் இனிப்பவை. இவற்றை நூலில் கண்டு சுவைத்து மகிழ்தல் ஒவ்வொருவரின் கடமையாகும்.