பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一、 Ł 3 | விளக்க நூல்கள் உலக இலக்கிய வரலாற்றில் செய்யுள் வடிவமே முதன் முதலாகத் தோன்றியது என்பது இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் கண்ட முடிவு. தமிழ் இலக்கிய வரலாற்றுக்கும் இவ்வுண்மை பொருந்துவதாக அமை கின்றது. தாள், அச்சு இயந்திரம் முதலியவை கண்டறியாத தற்கு முன்னர் தமிழ் நாட்டில் ஒலைச் சுவடிகளிலேயே எழுதி வந்தனர். சொற்சுருக்கமாகிய கவிதைகளை எழுதி வருவதற்கு ஒலைச்சுவடியே மிக்க துணையாக இருந்தது. பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் போன்றவர்களின் உரையும் இந்த ஒலைச்சுவடிக்குத் துணையாக அமைந்தது. அகராதிக்கு மூலங்களாக இருந்த நிகண்டுகள் கூட செய்யுள் வடிவமாக இருந்து வந்தவை. அக்காலத்தில் கல்வி முறையும் ஒரு சில புலவர்களின் சொத்தாக இருந்தது. கவிதை வடிவம் நினைவில் வைத்துக் கொள்வதற்குப் பெருந்துணையாக இருந்தது. காகிதமும் அச்சுப் பொறியும் தோன்றிய பிறகு உரைநடை இலக்கியம் பெருகலாயிற்று. இதனால் கவிதை வடிவிலிருந்த நூல்கட்கும் பரிமேலழகர் போன்ற செறிவும் சுருக்கமுமாக அமைந்திருந்த உரைக்கும் விளக்க நூல்கள் தோன்ற வேண்டியது இன்றியமையாத தாயிற்று. இந்தப் போக்கில் புலவர்கள் விளக்க நூல்கள் படைத்து உள்ளனர். இந்த முறையில் தமிழ்க்கடல் இராய.சொ. இரண்டு விளக்க நூல்கள் படைத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெருத்தொண்டு புரிந்துள்ளார்கள்.