பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க துல்கள் 53 அம்மையாரும் நடத்தின இல்வாழ்க்கையின் சோதனை யால் பெற்ற உண்மைகளை இல்லறத்தாலுக்குக் கூறுவார். துறவறத்தாருக்கு வழிகாட்டுவார். இகழ்வினையை ஒப்புக்கொள்ளுகின்றார். அரசனுக்கு வழி காட்டுகின்றார். அமைச்சனுக்கும் தெறியமைக்கின்றார். அரசாங்கத்தில் இருக்கவேண்டிய இன்றியமையாத பகுதிகளை வரை யறுத்து வழிகாட்டுகின்றார். 'அறன் அறிந்தேம் ஆன்ற பொருள் அறிந்தேம்; இன்பின்திறன் அறிந்தேம்: வீடு தெளிந்தேம் என்று வள்ளுவர் வாய்மொழியைப் பாராட்டுவார் கொடிஞாழன் மணிபூதனார் என்ற செத்தாப்புலவர். அதன் சுருக்கத்தின் பெருமையை, "கடுகைத் துணைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்று புகழ்வார் இடைக்காடர் என்ற புலவர் பெருமான். நம் ஒளவைப் பாட்டியாரோ கடுகு பெரியது' எனக் கருதி அந்நூலுக்கு அனுவை ஒப்பிட்டுக் காட்டுவார். இன்பத்துப்பால் வள்ளுவர் இதனைப் பாடவில்லை என்று சிலர் கருதுவர். அது தவறு; பெருந்தவறு. அகப்பொருள் தத்துவத்தை அறியாதார் கூறுவது இது. அகத்தினைப் பொருளான இன்பம் அல்லது காமம் பருவம் நிரம்பிய உயர்தினை அஃறிணை உயிர்க்கெல்லாம் பொதுவாய் அமைத்து கிடப்பது. எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வருஉம் மேவுற் றாகும்’ என்று ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் சுட்டி உரைப்பார். காமம் அல்லது இன்பம் உடலோடு ஒட்டிய இயல்புடையது. இத்தகைய இன்ப உணர்வை - காமத் துடிப்பை - நெறிப்படுத்திய பொருளாகக் கொண்டவை அகத்தினைப் பாடல்கள் வாழ்க்கை நெறியுடன் வாழ்ந்த சங்கப் புலவர்கள் மன்பதையை அந்நெறியில் வாழ்விக்க விரும்பியே உலகம் நீடு நின்று வாழ உயிர்க் கொடையாகத் 3. தொல்-பொருள். பொருளியல் - 27 இளம்)