பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழ்க்கடல் ராயசொ திகழும் காம உணர்ச்சியைச் சிறப்புடைய பொருளாகக் கொண்டு பாடல்களை யாத்தனர். "தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற குறிக்கோள் நெறியுடன் வாழ்த்தவர்கள் சங்கப்புலவர்கள். இன்றியமையாமை அகத்திணையின் இன்றியமை யாமையையும் சிறப்பினையும் புலப்படுத்தவே பொருளிலக் கணம் கண்ட தொல்காப்பியர் அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என நான்கு இயல்கள் வகுத்து அகத்தினை நெறியினைத் தெளிவுபட விளக்கி யுள்ளார். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் தனிச்சிறப்பை வலியுறுத்த விரும்பிய சங்கப்புலவராகிய கபிலர் பெருமான் அவனுக்கென்றே பத்துப்பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டு என்ற அகத்தினைப் பாடலினை யாத்தனர் என்பது சண்டு நீன தினைந்து பார்க்கத் தக்கது. அதற்குக் காரணம், என்ன? தமிழ் மொழியின் தனி வீற்றினைப் பிற மொழியாளர் உணர வேண்டுமேல் அவர்கள் முதலில் அறிய வேண்டும் பொருள் அகப்பாட்டே என்று கருதியதே யாகும். அறிவியலாசிரியர் தாமே தம் செய்திறனால் கருவி யொன்து சமைத்துச் சில அறிவியல் மெய்ம்மைகளை வினக்குவதுபோல் ஆசிரியப் பெருந்தகையாகிய கபிலரும் தானே பாவியற்றி அதனைக் கொண்டே அகத்தினை தெதியின் உயிரனைய கருத்தினை அவ்வரசனுக்குத் தெளிவுறுத்தினார். சிறப்பு: அகத்தினையின் சிறப்பு வேறு சில குறிப்புகளாலும் அறியப்பெறும் "ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தற்குப் பாடியது” என்ற குறிஞ்சிப் பாட்டின் துறைக் குறிப்பும், நுதலியதோ எனின், "இந்நூல் என் துதலிற்றோ எனின் தமிழ் நுதலியது" என்ற இறையனார் களவியலுரையாசிரியரின் குறிப்பும், "ஒண்திந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ?” என்ற 4. இறைகள. முதல் நூற்பா உரை. பக். 14. 5. திருக்கோவை - 20.