பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக தமிழ்க்கடல் ராயசொ 230 அரிய குறள்களில் வள்ளுவர் காட்டும் இன்பம் பரவிக் கிடக்கின்றது. இந்தப் பகுதிகளைக் களவியல், கற்பியல் என்ற இரு கூறுகளாகப் பிரித்துள்ளனர். களவியலில் ஏழு அதிகாரங்களும் கற்பியலில் பதினெட்டு அதிகாரங்களும் அடங்கியுன்னை. இன்பத்துப்பாலின் குறள்கள் யாவும் அதி துட்பமானவை; நாடக வழக்காக அமைந்தவை. "நாடக வழக்கு என்பது, சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வருவனவாகத் தொகுத்துக் கூறுவது. அதாவது, செல்வத் இாலும் குலத்தாலும், ஒழுக்கத்தானும், அன்பினாலும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து, எதிர்ப் பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போருமின்றி அடுப்போகுமின்றி வேட்கை மிகுதியால் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையால் வரைத்தெய்தினார் எனவும், பிறவும் இந்நிகரன வாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கறுதல் என்பர் இளம்பூரணர். இங்ங்ணம் வரும் குறள் களும் துட்பமானவை: பரிமேலழகர் உரையும் நுட்பமானது. ஆகவே, சாதாரண மக்களும் படித்து இன்புறுவதற்காகத் தமிழ்க்கடல் இராய.சொ. இன்பத்துப் பாலை எளிமைப் படுத்தி எளிய தடைகளில் வழங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டுகளாக சிக்கலான இயல் தலைப்பு களையும் விளங்குவதற்குச் சிரமமான குறட்பாக்களின் பொருளையும் எளிமைப்படுத்தியுள்ள சில இடங்களைக் காட்டுவேன். t) தகை அணங்கு உறுத்தல்: இது களவியலில் முதல் அதிகாரத் தலைப்பு. இதன் பொருள் விளங்கவில்லை என்று கருதலாம். தமிழ்க்கடலின் விளக்கம் இது. தகை - அணங்கு - உறுத்தல் என்ற மூன்று சொற்களைக் கொண்ட தொடர் இது. இதனை அணங்கு - தகை - உறுத்தல் என்று மாற்றிக் கொண்டால் பொருள் விளங்கிக் கொள்வது 7. அகத்தினை - 56 இன் உரை.