பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 67 எளிதாகும். அணங்கு' என்றால் பெண். தகை என்றால் அழகு. முதலியன. உறுத்தல்' என்றால் வருத்தத்தை உண்டாக்குதல்; எனவே, இச்சொற்றொடர் மங்கையின் அழகு முதலியன வருத்தத்தைச் செய்தல்' என்ற பொருள் தந்து நிற்கின்றது. மேலும், இந்த அதிகாரத்தின் பெயர் நிறைந்த பொருளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. 'பெண்ணின் அழகு யாருக்கு வருத்தத்தைத் தருகின்றது? அந்தப் பெண் யார்? அஃது ஏன் வருத்துகின்றது? என்ற வினாக்கள் எழுகின்றன. இவற்றிற்குரிய விடைகள் முழுவதும் அந்த அரிய சொற்றொடருக்குள் தொக்கி நிற்கின்றன. வள்ளுவர் பெருமான் தம் காமத்துப்பாலை ஒரு நாடகம் போல் ஆக்கியுள்ளார். (அதில் கூறப்பெறும் செய்திகள் அனைத்தும் நாடக வழக்காக அமைந்தவை). செய்திகளைக் கூறும் தலைவி, தோழி, தலைவன் முதலியோரும் நாடக வழக்காகப் படைக்கப் பெற்றவர்கள் என்பதை நினைவிலிருத்திக் கொண்டு காமத்துப்பாலை அநுபவிக்க வேண்டும். கவிஞர் பெருமான் திருக்குறளின் மற்றப் பகுதிகளைத் தற்கூற்றாக அமைத்ததுபோல் காமத்துப்பாலை அமைக்கவில்லை. இப்பகுதியில் வரும் கூற்றுகள் யாவும் பிறர் வாயிலாக வெளிப்படுபவை. இவை யாவும் அகத்துறைகளாக வெளிப்படுகின்றன. களவியல் என்பது காதல் சேர்க்கை. காதலர் சேர்வதற்கு முதலாவது நிகழ்ச்சி அவ்விருவரின் சந்திப்பு. சோலையில் ஒரு பருவமங்கை தனித்து நிற்கின்றாள்: ஆங்கு ஒர் இளைஞன் அந்த அனங்கைக் காண்கின்றான். அணங்கின் அழகு அவ்விளைஞனை வருத்துகின்றது. இதுதான் தகைஅணங்கு உறுத்தல்' என்பது. அம்மெல்லிய லாளின் பேரெழிலால் தாக்கப்பெற்ற இளைஞன் அம்மங்கை நல்லாளைப்பற்றி எண்ணமிடுகின்றான். அவன் உள்ளப் பெருக்கம் ஊற்றெடுத்தோடும் அழகே இந்த அதிகாரத்தின் பாக்கள் பத்தும். இவையனைத்தும் விலையில்லா மாணிக்கங்கள்.