பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 ம் தமிழ்க்கடல் ராயசொ இந்த அதிகாரத்தின் முதல் குறள் மிகவும் கம்பீரமாக தடைபெறுகின்றது. நாடக அரங்கில் நின்று கொண்டிருக்கும் அழகிய அரிவையின் உருவைக் கண்ட, தேர்த்த ஆண் நடிகன் எவ்வளவு பரபரப்போடு செயற் படுவான் என்பதை முதல் குறள் ஓவியம் தெள்ளிதிற் தெரிவிக்கின்றது. தேன் பிளிற்றும் பூஞ்சோலை நடுவே நிற்கும் மயிலனைய மங்கையின் கட்டழகால் சொக்கிய தலைவன். அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ 1 கணங்குழை மாதர்கொல்! மாலும்என் நெஞ்சு () என்று மருண்கின்றான். கணங்குழை - கனத்த காதணியை யுடைய இப்பெண்' அணங்குகொல் - தெய்வப் பெண்ணோ: அன்றி ஆய்மயில் கொல் - ஆராய்ந்தெடுக்கப் பெற்ற மயிலோ அல்லது, மாதர்கொல் - ஒருமானுடப் பெண்தானோ? என் நெஞ்சு - என் மனம், மாலும் - மயங்கி திற்கின்றதே என்று கூறி அவள்வயத்தே தன்னைப் பறி கொடுத்துவிட்டான். இங்ங்ணம் முதல் குறள் பேசுகின்றது. 2. புணர்ச்சி மகிழ்தல்: இது களவியலில் மூன்றாவது அதிகாரம். தான் காதலித்த பெண்ணின் தகுதியால் தலைவன் தாக்கப்பெற்றான். பின் தான் காதலித்த பெண்ணின் குறிப்பை அறிந்தான். (அதிகா - 2). அப்பெண் தன்னை விரும்பியதை அறிகின்றான். இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர். இருவரும் கூடி இன்புற்றனர் 8. அதில் கனமான ஆபரணத்தை அணிதல்_பெண்களுக்கு.அழகும் சிறப்பும் ஆகும் எனப் பண்டைக் காலத்தில் கருதப்பெற்றதாகத் தெரிகின்றது. இதுபற்றியே வள்ளுவர் 'கனங்குழை' என இயம்புகின்றனர். இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பழைய தமிழ்மக்கள் நமக்குக் கணங்குழையை - பூச்சிக்கூடு எனப் பெயரால் வழங்குவது - நினைப்பூட்டுகின்றனர்.