பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 69 கந்தர்வ முறையால்' இதுகாறும் காணாப் புத்தின்பத்தை இருவரும் எய்தினர். இன்பம் இருவருக்கும் பொது எனினும் அம்மங்கை பெண்ணியல்பால் வாய்விட்டுக் கூறவில்லை. ஆனால் தான் அம்மங்கைபால் நுகர்ந்த இன்பத்தை எண்ணி எண்ணி மகிழ்கின்றான் இன்பக் கடலாடிய ஆணழகன். புணர்ச்சியை மகிழ்ந்து கூறும் முறையில் யாக்கப் பெற்ற பாக்களைக் கொண்ட அதிகாரமாதலின் இது 'புணர்ச்சி மகிழ்தல்' என்னும் பெயர் பெற்றது. இந்த அதிகாரத்தின் முதற்குறள் இதன் கொடுமுடி என்று எண்ணத்தக்க முறையில் அமைந்து கிடக்கின்றது. கலவியினால் தான் பெற்ற இன்பத்தை அப்படியே ஓவியம் போல் காட்டுகின்றான் தலைவன். கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள (21) மனிதன் இன்பத்தை நுகர்வதற்கு இறைவனால் அருளப் பெற்ற வாயில்கள் ஐந்து. அவை கண், காது, வாய், மூக்கு, உடல் மெய் என்பவை. இந்த ஐந்தின் வழியாகவே மக்கள் அனைவரும் இன்பம் அடைகின்றனர். இவ்வைம் புலதுகர்ச்சியையும் ஒரே காலத்தில் ஓரிடத்தில் பெறுவது அரிது. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐந்து கருவிகளின் இன்ப நுகர்ச்சியும் ஒரு சங்கீத கச்சேரி போல் மங்கையிடம் தான் உள்ளன என்று இயம்புகின்றான் தலைவன். அவள் அழகை - அன்பைப் பருகும் இன்பத்தைக் - கண்கள் கொண்டன. அக்குயிலின் இசையை - உண்ணும் இன்பத்தைச் - செவிகள் ஏற்றன. அப்பணி மொழியாழின் பாலொடு தேன் கலந்தன்ன திருவாய் அமிழ்தத்தை மாந்தி வாய் இன்பம் பெற்றது. 9. உடலால் புணரவில்லை, உள்ளத்தால்தான் புணர்ந்தனர் என்று இருவேறுபட்ட கருத்துகள் உண்டு.