பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 தமிழ்க்கடல் எனயசொ அப்பாவை பூமேனியின் இயற்கை மணத்தையோ, செயற்கை மணத்தையோ மூக்கு நுகர்ந்து இன்புற்றது. அம் மடமயில் உடலொடு பொருந்தி யாக்கை பெற்ற இன்பத்துக்கு அளவே இல்லை. இப்படியாக ஐவகை இன்பத்தையும் ஒருங்கே பெறவல்ல ஒரு பொருள் உலகத்தில் உண்டு என்றால் அப்பொருள் பெண்ணே எனத் தலைவன் வாயிலாக வள்ளுவனார் விளக்குகின்றார். இத்தக் குறன்மணியை அப்படியே எடுத்துச் சிறிதும் சுவை குன்றாமல் இடமறிந்து தமது பெரிய புராணத்தில் காதல் விளையாட்டில் தேர்ந்த சுந்தரமூர்த்தி காதையில் ஒரு பாடலில் பொருத்தி இன்புறுகின்றார் சேக்கிழாரடிகள் என்று ஈண்டுக் குறிப்பிடுதல் மிகவும் பொருத்தமாகும். ജ് . § urreirea இை ால் வண்டிமிழ்பூங் குழலாரை மணம்புணர்ந்த வன்தொண்டர் புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட துணநலத்தைக் கண்டுகேட்டு உண்டுஉயிர்த்துஉற். அமர்ந்திருந்தார் காதலினால் என்ற இப்பாடலில் வள்ளுவப் பெருந்தகையின் குறள் மணி அற்புதமாகப் பதிக்கப்பெற்றிருப்பதைக் கண்டு இன்புறத் 怒 3. நலம் புனைந்து உரைத்தல்: இது களவியலின் தான்காம் அதிகாரம். காதலியைக் கண்டு, அவளது குறிப்பை அறிந்து அவளோடு இன்பக் கடலாடிய தலைமகன், அவளது கூட்ட இன்பத்தை மகிழ்ந்து உரைத்தான் சென்ற அதிகாரத்தில். இங்கு அந்த நங்கையின் தலத்தைப் புனைந்து உரைத்து மகிழ்கின்றான். நலம் 10. பெரிய புரா. எயர்கோன் - 267