பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 71 சிறப்பாக உள்ளது அவளது அழகேயாகும். எனவே, அப்பூங்கொடியின் அழகிய உறுப்புகளை தனித்தனியே அகக்கண்ணாலும் நோக்குகின்றான். அவற்றிற்கேற்ற பொருள்களும் உலகத்து உண்டோ எனத் தேடுகின்றான். எந்தச் சீரிய பொருளும் தன் காதலியின் எழிலுக்கு ஈடாகாதென உணர்கின்றான். புணர்ச்சி மகிழ்ந்த காதலனுக்கு அவ்வாறு தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. கண்ணகிபால் புத்தின்பம் நுகர்ந்த கோவலன் மெய்ம்மறந்து நலம் புனைந்து உரைத்தல் பற்றிச் சிலப்பதிகாரத்தில் இளங்கோஅடிகள் அள்ளிப் பொழியும் தீந்தமிழ்ச்சொற்கள் இவை: மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞை, நின் சாயற்கு இடைந்து தண்கான் அடையவும் அன்னம் நன்னுதல்! மென்னடைக்கு அழிந்து நன்னீர்ப் பண்ணை நளிமலாச் செறியவும்; அளிய தாமே, சிறுபகங் கிளியே! குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த,நின் மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மடநடை மாறு ! நின் மலர்க்கையின் நீங்கது உடன்உறைவு மரீஇ ஒருவா ஆயின ! மாசறு பெண்ணே வலம்புரி முத்தே ! காசறு விரையே கரும்பே தேனே ! அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே ! பெருங்குடி வாணிகன் பெருமட மகளே ! மலையிடைப் பிறவா மணியே என்கோ ! அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ ! யாழிடைப் பிறவா இசையே என்கோ ! தாழிருங் கூந்தல் தையால் நின்னை என்று உலவாக் கட்டுரை பலபா ராட்டி 11. சிலம்பு - மனையறம்படுத்த - 53-102, 73