பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தமிழ்க்கடல் ராயசொ இவ்வாறு மகிழ்கின்றான் கோவலன். பொருத்தமான இடத்தில் பொருத்தமான பகுதியைப் பிற இலக்கியங்களி லிருந்து காட்டும் இராய.சொவின் புலமையைப் பாராட்டுகின்றோம். நம் வள்ளுவனார் படைத்துக் காட்டும் தலைவன் அவனையே முன்னிலைப்படுத்தாது, படர்க்கையில், தன் காதவியின் நலனைப் புனைந்து உரைக்கின்றான். அவன் அனிச்சம் என்ற மெல்லிய மலரை நோக்குகின்றான். அதனைக் கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்து அதற்கு வாழ்த்தும் கூறுகின்றான். நன்னீரை வாழி, அனிச்சமே! நின்னினும் மென்னிரள், யாம்வீழ் பவள் (31) . 'ஏ அணிச்சப் பூவே! நீ வாழ்வாயாக. நீ நல்ல தன்மையையுடையாய்! எனினும் எம்மால் விரும்பப்பட்ட அணங்கு தின்னைவிட மெல்லிய நீர்மை வாய்ந்தவள்’ என உரைக்கின்றான். அவனுடைய விருப்பத்திற்கு இலக்கான மங்கை நல்லான் அனிச்சத்தை விட மெல்லியலாள் என அவன் தீண்டி உணர்ந்தானாதலின், தன் காதலியை நோக்கக் கேவலமான அந்த அனிச்சம் வாழ்வதில் அவனுக்குத் தடை இல்லை. 4. நானுத் துறவு உரைத்தல்: இது இன்பத்துப் பாலில் ஆறாவது அதிகாரம், காதற்சிறப்பைச் சொல்லி மகிழ்ந்த தலைவன் (3-வது அதிகா, ஈண்டு தன் நாணத்தை முழுதும் துறந்து வாய்வெருவுகின்றான். தலைவிக்கும் இதே நிலை தான். நானத்தைத் துறந்து சொல்லுதல், நாணுத துறவு உரைத்தல்' ஆகும். நாண் துறந்த தன்மையை வள்ளுவர் பெருமான் தலைவன்-தலைவி ஆகிய இருவர்பாலும் ஏற்றுகின்றார். ஆயினும் தலைவன் மீதே மிதமிஞ்சி சுமத்துகின்றார். இந்த அதிகாரத்தின் பத்துப் பாக்களில் ஏழு தலைவன் கூற்றாகவும் மூன்று தலைவி கூற்றாகவும் அமைகின்றன.