பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 73 இருவர் முறைக்கும் வேறுபாடு மிகப் பெரிது. பெண் கூற்றைப் பெண்ணியல்புக்கேற்றவாறு மிக்க நயமாக - துணுக்கமாக - நாகரிகமாக - அமைத்துக் காட்டுகின்றார். இந்த அதிகாரத்தில் மடல்பற்றிய கருத்தை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மடல் ஏறும் கருத்தைத் தமிழ்க்கடல் விரும்பவில்லை. அஃது அநாகரிகமான செயல் என்பது அவர்தம் கருத்தாகும். எனினும் இக்கருத்தை விளக்காமல் விட்டு வைக்கவில்லை. மடலேறுதல் என்பது விருப்பம் மேலிட்ட ஒரு பெண்ணை அடைவதற்கு கையாளப்பெறும் முறை யாகும். பனங்கருக்கால் ஒரு குதிரையைச் செய்து, அதன் மீது ஏறித் திருவீதியை ஒருவன் பவனி வர வேண்டும். அப்போது தான் காதலித்த பெண்ணின் உருவத்தை எழுதிய படத்தைத் தன் கையில் வைத்திருப்பான். பெற்றோர் இதனைக் கண்டு நாணித் தன் மகளை அவனுக்கு மணம் செய்விப்பர். அல்லது ஊர் மக்கள் அப்பெற்றோரைத் திருமணத்திற்கு இணங்கச் செய்வர். இது பற்றித் திருமங்கையாழ்வார் செய்த சிறிய திருமடல், பெரிய திருமடல் என்ற இரண்டு இலக்கியங்கள் மிகுபுகழ் பெற்றன. இதனை முன்னர் விளக்கியுள்ளேன். நம் தமிழ்க்கடல் பதிப்பித்த வதனகுலாதித்தன் மடலை முன்னர்க் குறிப்பிட்டேன்' வள்ளுவப் பெருந்தகை காதலன்" களவு முறைப்படி இன்பம் நுகர்ந்து களிக்கின்றான். அவளை மடலூர்ந்தாவது மனையாளாக அடைய முயல்கின்றான். அவளும் தனிமை பொறாது அவனை அடையும் அவா மிகுதியால் நானம் துறந்து பேசுகின்றாள். எனவே, முன் அதிகாரங்களில் குறிப்பிட்டவாறு இவ்வளவு நெருங்கி அளவளாவி இன்பம் நுகர்ந்த இப்பெருங்காதலர் முறைப்படி மணந்து 12. இந்நூல் - பக் - 136 13. வள்ளுவர் இன்பத்துப்பால் முழுவதும் நாடக வழக்காகப் படைத்துக் காட்டப் பெற்றது. இதனை நினைவில் வைக்க வேண்டும்.