பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தமிழ்க்கடல் ராயசொ கொண்வதற்கு ஏதேனும் தடை தோன்றியிருத்தல் வேண்டும் என்று இனகிக்க வேண்டியுள்ளது. முதலில் காதல் கொண்ட ஆணும் பெண்ணும் வேறு எவர் தலையீடுமின்றித் தாங்களாகவே கூடி உறவாடி இன்புற்று மகிழ்ந்து பின்னர் திருமணம் செய்து கொள்ளுதல் என்ற முறை நம் தமிழ்நாட்டில் பண்டை நாளில் பெரிதும் இருந்து வத்ததாகத் தெரிகின்றது. இம்முறையை வள்ளுவர் படைத்த தலைமகனும் தலைமகளும் முதற்படியை ஒல்லும் வகையால் கடந்து விட்டனர். இரண்டாம்படி ஏறும்போது தடை தோன்றுகின்றது. காரணம் யாதாக இருக்குமோ? வகுப்போ? சமயமோ? பணமோ? அன்றி அவை போன்ற பிற எவையோ காரணம், யாதாயினும் என்? இவ்வளவு துரம் சென்று இன்பம் கரைகாணாதெய்தி அறவழி நிற்கும் அன்ரூகப் பெருந்தகை படைத்த காதலர் எதையும் பொருட்படுத்தி அஞ்சுவரோ துணிவு கொண்ட ஆண் கண் மடதுசாமுன் வருகின்றான். காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி (51) பெண்களிடத்தில் காமத்தை அதுபவித்துவிட்டு அல்துைபவிப்புக்கு ஏற்படும் தடை காரணமாக வருந்திய ஆண் மக்கட்கு அவ்வின்ப நுகர்ச்சிக்குத் துணை செய்ய வல்லது மடல் என்ற ஒன்றைத் தவிர வேறில்லை என்று கூறுகின்றான் தலைமகன்' காதல் நோயால் தாக்கப்பெற்ற தலைவி.பால் திரும்பலாம். நோயால் தாக்குதல் ஒன்றே எனினும், தனது மென்மைக்கேற்ப அவள் மென்மையாகப் பேசுகின்றாள். நிறையரியர் மன்னளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும் (58) 14. இம்முறை செயற்பட்டதாக இலக்கியம் இல்லை. பயமுறுத்துவதற்கு இம்முறை பயன்பட்டதாகவே கொள்ள வேண்டும். புலி வருகிறது, புலி வருகிறது என்று சொல்லிப் பயமுறுத்துவது போல.