பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 75 ஐயோ! காமத்துக்குக் கண்ணில்லையோ? “காமமானது, பெண்கள் நிறையினாலே அருமையுடையார்: அன்னார் மிகவும் கருணை செய்தற்குரியார்; என்று கூடக் கருதி இரங்காது அவர் மறைதலையும் மீறி அம்பலமேறி வெளிப்பட்டு விடுகின்றதே" என்று தனது நிலையைப் பொதுவாகப் பெண்ணினத்தின் மேலேற்றிச் சொல்லு கின்றாள். இவ்வாறு படர்க்கையில் பொதுவாகப் பேசிய தலைவி, அடுத்துத் தன்னையே முன்னிலைப் படுத்தியும் கூறிக்கொள்ளுகின்றாள். அறிகிலார் எல்லாரும் என்றேனன் காமம் மறுகின் மறுகும், மருண்டு 59) "என்னுடைய காமமானது, எல்லோரும் இதுவரை என் நிலையை அறியவில்லை என்று கருதியே தெருவின் கண்ணே மயங்கிச் சுற்றுகின்றது. என்னை இரகசியமாக இருக்கவிடாது வீதிவரை இழுத்து விட்டுவிட்டதே இந்தப் பொல்லாத காமம் : அந்தோ! இஃதென்னை?" என் கின்றாள். காலச் சுருக்கம் கருதி கற்பியலில் சில இடங்களைக் காட்டி வள்ளுவரை நிறைவு செய்ய நினைக்கின்றேன். இந்த இயலில் 18 அதிகாரங்கள் உள்ளன. இவை பிரிவாற்றாமை' முதல் ஊடல் உவகை ஈறாக உள்ளவை. 8. படர் மெலிந்து இரங்கல்: மணம் புரிந்தபின் காதலன் ஏதோ ஒரு காரணம்பற்றிப் பிரிகின்றான். அவன் பிரிவை ஆற்றாத காதலி துன்பத்தால் மெலிவெய்தி வருந்துதல் பற்றி இவ்வதிகாரம் பகர்கின்றது. படர் - துன்பம்; மெலிதல் - இளைத்தல்; இரங்குதல் - வருந்துதல். இதனைத் தலைவி தன் தோழிபால் தலைவனின் பிரிவு தன்னால் ஆற்ற முடியாத துன்பத்தைப் பகர்ந்து அலமருகின்றாள். காமத்துப் பாலில் இஃது ஒன்பதாவது அதிகாரம்.