பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தமிழ்க்கடல் ராயசொ தோழி. நீ இப்படி வருந்துதல் தகுமா? நின் தானத்துக்கு இஃது அடுக்காதே' என்கின்றாள். இதற்குத் தலைவி தோழியை நோக்கி நான் என் செய்வேன்? என்கின்றான். மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்று நீர்போல் மிகும் (81) 'இந்நோயை நான் மறைத்துத்தான் பார்க்கின்றேன். ஆனால் அது குறைகின்றதில்லையே! இறைக்கின்றவர்க்கு ஊற்று தீரானது எப்படிப் பெருகி வருமோ அவ்வாறு அதிகமாகி வருகின்றது. இக்காமநோய். யான் செய்யுமாறு என்? என்று பேசுகின்றான் தலைவி. 9. பசப்பு உறு பருவரல் இது இன்பத்துப் பாலில் 11வது அதிகாரம் கற்பியல் பகுதியில் 3வது அதிகாரம். இங்கு பசப்பு என்பது பிரிவாற்றாமையால் வரும் ஒரு நிறமாற்றம். தாங்கன் பிரிவை ஆற்றாத நாயகி அதனாலேயே திறவேதுபாட்டால் அடையும் துன்பம்பற்றிக் கூறுவது. பகுனரல் - துன்பம். பிரிவினால் பசலை என்ற ஒரு திறத்தையடைந்து தலைவி வருந்துதல் கூறும் பசப்புறு உருவால் என்னும் இந்த அதிகாரத்திலுள்ள பத்துப் பாக்களும் தலைவி கூற்றாகவே வருகின்றன. மேனி பசந்த தலைவி கூறுகின்றாள். தயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன், பகர்ந்தனன் பண்பியார்க் குரைக்கா பிற (101) ‘என்னை விரும்பி ஏற்ற தலைவருக்குப் பிரிவுக்கு அன்று உடன்பட்டேன். இன்று நிறம் பசந்த என் இயல்பை யாரிடம் முறையிடுவேன்? முதலில் என்னை நயந்த அவர், பின்னர் அவர்பாட்டுக்குப் பயணம் வைத்துக் கொண்டு விட்டார். நானும் அவரைப் பிரியவிட்டு விட்டதால் எப்படியோ அவர் பிரிவை உடன்பட்டேன் என்பது நிச்சயம். இப்பசப்பு வந்து ஏன் என் பிராணனை வாங்குகிறது? இந்தப் பசப்புக்கு எவ்வளவு ஆணவம்? அருமையான விளக்கம்.