பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 தமிழ்க்கடல் ராயசொ போனான்; இன்னும் வாராமலும் உள்ளான்' என்ற சினத்தால் அவன் இவ்வுணர்வு அற்றவன் எனத் தலைவி கடிலது இயல்பேயன்றோ? இதுவும் ஒரு விதத்தில் உளவியல் உண்மைக்குப் பொருந்துவதாக அமைகின்றது. இம்முறையிலேயே இந்த அதிகாரம் அமைகின்றது. தாக்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காயத்துக் காழில் கனி (111) என்பது முதல் பாட்டு, "தாம் வீழ்வார் - தாம் விரும்புகின்ற கணவரால், தம் வீழப் பெற்றவர் - தம்மை விரும்பப்படும் பெண்கன் காமத்துக்காழ் இல்கனி - காம துகர்ச்சி என்னும் வித்து இல்லாத பழத்தை பெற்றாரே பெற்றார் ஆவர். பெண்ணாகிய தான் மட்டும் அவரைக் காதலித்து என்ன பயன்: தாம் காதலிப்பது போல் கணவராலும் காதலிக்கப் படும் கரிசல்லவா காம துகர்ச்சியாகிய கனிச்சாற்றை அருத்தவல்லார்’ என்திலை அவ்வாறாயிற்று' என்று கருத்துகின்றான் காதலி. 11. உறுப்பு நலன் அழிதல்: பிரிவுத்துயரால் வருந்தும் காதலியின் உறுப்புகள் வாட்டம் அடைதலைக் கூறுவது இந்த அதிகாரம், இன்பத்துப்பாலில் பதினாறாவது அதிகாரம் இது உறுப்பு - அவயவம் நலன் - அழகு. அழிதல் - கெடுதல். உறுப்பு நலன் அழிதல் - உடம்பில் காம ஊற்றுகளாக உள்ள நற்பகுதிகள் வனப்பு இழத்தல். மாலைப் பொழுதைக் கண்டு ஏற்பட்ட வருத்தம் பொங்கி எழ 13வது அதிகாரம் அவள் உறுப்புகள் சோர்வடை கின்றன. தலைவிக்கு உயிரனையாளாகிய தோழியால் தன்னால் பெரிதும் போற்றிக் காக்கப்பெறும் உறுப்பு நலன் அழிதலைப் பொறுக்கக் கூடவில்லை. தோழியானவள் தலைவி அழகிழத்தலுக்கு ஆற்றாளாகித் தலைவியை நோக்கி உரைக்கின்றாள். - சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உன்னி நறுமலர் நாணின கண் (151)