பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 79 ஆற்றாமைச் சிறுமையை நம்மிடம் நிற்க வைத்து நீண்ட யாத்திரை போன அவரையே தினைத்தலால் நின் கண்கள் நல்ல பூக்களுக்கு வெட்கம் அடையும் நிலைக்கு வந்து விட்டன. குவளை, தாமரை முதலான பூக்கள் அன்று நின்கண்களுக்குப் போட்டியிட வந்து ஆற்றாமல் தோற்று நானமடைந்தமை இன்று கதையாகி விட்டது. அவற்றை வென்று பொலிவெய்து விளங்கிய தின் அஞ்சனம் தோய்ந்த வாட்கண்கள், இன்று அழுதழுது அருவிபோல் நீர் உகுத்து ஒளியிழந்து கேவலம் அம்மலர்கட்குப் பின்னிடும் நிலையை எய்திவிட்டனவே. 12. குறிப்பு அறிவுறுத்தல்: இஃது இன்பப் பகுதியின் இருபதாம் அதிகாரம். குறிப்பு அறிவு உறுத்தல் என்றால் என்ன? ஒருவர் குறிப்பை மற்றொருவருக்குக் காட்டுதல். இது பிரிந்து சென்ற காதலன் திரும்பி வந்த பிறகு நடைபெறும் நிகழ்ச்சி. காதலன் இல்லம் வந்து சேர்ந்து விட்டான். "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?" காதலியைப் பிரிந்து சென்று திரும்பிய காதலன், அவன் தவறுதலை அறிவுறுத்துவதுபோல், அவன் வரவால் தோன்றிய மகிழ்ச்சியை மறைத்து ஒரு மாதிரியாகக் கோணி தின்ற நங்கையைப் புகழ்ந்து பாராட்டுகின்றான். நீ எவ்வளவு மறைத்தாலும் பயனில்லை. உன் கண்கள் உன் உள்ளத்தை உள்ளவாறு உரைக்கின்றன.' கரப்பினும் கையிகந்து ஒல்லா நின்உண்கண் உரைக்கல் உறுவதொன்று, உண்டு (191) 'கரப்பினும் - மறைத்தாலும், கையிகந்து -அதனைக் கடந்து: ஒல்லா - கட்டுப்படாமல், நின் உண்கண் - நினது மையுண்ட கண்கள்; உரைக்கல் உறுவது - சொல்லி நிற்பது: ஒன்று உண்டு - ஓர் இரகசியம் இருக்கின்றது. அதை ஏன் மறைக்கப் பார்க்கின்றாய்? கண்களைக் கட்டுப்படுத்த வலிமை இருந்தால் உன் முயற்சி பயன்படும். அஃது இல்லாதபோது வீண் முயற்சி எதற்கு? என அவள் கண் மூலம் வெளிப்பட்ட காதலைப் பலபடப் பாராட்டிக்