பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இt தமிழ்க்கடல் ராயசொ கொண்டிருக்கும்போது அவள் ஆருயிர்த்தோழி தோன்று கின்றாள். தோழியிடம் காதலி நலத்தைப் புனைந்து நான்கு குறள்களில் கூறுகின்றாள். இனபப் பகுதியில் கொடுமுடிகளாக இருப்பவை புலவி, புலவி துணுக்கம், ஊடல் உவகை என்ற இறுதி மூன்று இயல்கள். புலவி என்பது ஊடல். முதல் இரண்டு பாக்கன் தோழியின் கூற்று. தோழி தலைவியிடம் கூறுகின்றாள். முதல் குறளில் (22) "சிநேகிதையே, உன் கையிருப்பை இன்று நீ செவ்வையாகக் காட்டி விடல் வேண்டும்; தெரிகின்றதா? அவசரமாக அவரை ஆலிங்கனம் செய்துவிடலாகாது. புல்லாமல் இன்றிரவு புலவியை மேற்கொள்வாயாக! அதனால் அந்தப் பிரிவுத்துயரை நல்கிய மனிதர் அதுபவிக்கும் துன்ப தோயைப் பார்த்துக் கொஞ்சம் விளையாட்டுச் செய்யலாம்" என்று உரைக்கின்றான். . பின்னும் பகர்கின்றாள். ஒருகால் புலவியை நீட்டித்து விட்டால் ஆபத்தல்லவா ? விளையாட்டு விபரீதமாக ஆகக் கூடாதே என்று நினைத்த தோழி கூறுவாள்; உப்பமைத் தற்றால் புலவி, அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் (222) 'புலவி என்பது என்ன தெரியுமா? கூர்மையாகக் கவனித்துக் கொன். புலவி உப்புக்குச் சமம். சமையல் செய்வதில் உப்புக் கலப்பு எவ்வளவு சுவை தருகின்றதென்பது உனக்குத் தெரியும் உப்பின்றேல் எல்லாம் சப்பென்று தான் இருக்கும். உணவு சுவையாக இருப்பதற்கு உப்பு எவ்வளவு இன்றியமையாததோ அது போலக் கலவி இனிப்பதற்குப் புலவி இன்றியமையாதது. ஆனால் உப்பைப் போல புலவியும் ஓர் அளவுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும். உப்பு கூடினால் உணவு எப்படி இருக்கும்? கசக்குமல்லவா? புலவி அளவுக்குமேல் நீண்டாலும் கலவி கசப்பாக மாறிவிடும். எனவே புலவியாகிய உப்பை அளவறிந்து போட்டுக் கலவியாகிய உணவைச் சுவையுடையதாக்கு