பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விணக்க நூல்கள் 8: வாயாக உப்பைப் போட மறந்து விடாதே; அதிகமாகப் போட்டும் கெடுத்து விடாதே' என்று மிக அழகான எடுத்துக்காட்டோடு தலைவிக்கு அறிவுரை புகல்கின்றார் தோழியாக இருந்து புலவர் பெருமான். தோழியின் பேச்சைக் கடைப்பிடித்து வெற்றி பெறுகின்றாள் தலைவி. தலைவியைப் புலவி நீக்கிக் கூடி மகிழும் தலைவன், தலைவியின் புலவி அழகைப் புகழ்ந்து மகிழ்கின்றான் எட்டுப் பாக்களில், புலவி நுணுக்கம்' (24) என்ற அதிகாரத்தில் புலவியின் நுட்பமான தன்மையைப் புலப்படுத்துகின்றார் புலவர் பெருமான். பள்ளியறையில் தலைவனோடு கூடியிருக்கும் தலைவி நுண்ணிய சில காரணங்களைக் கற்பித்துக் கொண்டு ஊடல் நிகழ்த்துவது பற்றி இந்த அதிகாரத்தில் கூறப் பெறுகின்றது. முதல் இரண்டு பாக்கள் தலைவி கூற்றாக அமைகின்றன. முதல் பாடல் தலைவி தலைவனை நோக்கிக் கூறுவது; இரண்டாவது தலைவி தோழியிடம் உரைப்பது. பின்வரும் எட்டுக்குறள்களும் தலைவன் கூற்றாக அமைகின்றன. இவை தலைவன் தோழியிடம் தலைவி புலவிக்குக் கொண்ட துணுக்கத்தை விரித்துரைப்பனவாக அமைகின்றன. துணுகிப் புலக்கும் தலைவி தலைவனிடம் சாற்றுவது: பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுஉண்பர் நண்ணேன் பரத்த நின் மார்பு (231) 'பரத்த - பரத்தமையுடையாய்; பெண்ணியலார் எல்லாரும் - பெண்ணியல்பினையுடைய அனைவரும், கண்ணில் - அவர்கள் கண்களினால்; பொது உண்பர் - பொதுவாக நின் அழகைப் பருகுவர். நின் மார்பு நண்ணேன் - ஆதலால் அவரனைவரும் குடித்த எச்சிலாக்கிய நின் மார்பை நான் அணையேன்” என்று இயம்புகின்றான். 'பரத்தன்' என்பது பரத்தையின் ஆண்பால். அவன் புறத்தே போயிருந்தபோது எதிர்ப்பட்ட