பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ம் தமிழ்க்கடல் ராயசொ பெண்கள் யாவரும் கண்களால் பார்த்திருப்பார்களாம்! அதனால் காதலன் மாசுபடுத்தப்பெற்று விட்டானாம்! அதற்காகக் காதலனை அணுக மாட்டாளாம்! புலவிக்குக் கற்பித்த துணுக்கம் அற்புதம்: தோழியிடம் கூறுகின்றாள் தலைவி. ஊடி இருந்தேமாத் தும்மினள்; யாந்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து (232) 'நாம் அவரோடு ஊடியிருந்தோம்; அவர் என்ன செய்தார் தெரியுமா? பலே ஆசாமி உடனே ஒரு தும்மல் தும்மினார்; ஏன்? என் வாயைக் கிளறத்தான்! புலந்து வாய் பேசாது ஒரு பக்கமாகத் திரும்பிக் கொண்டிருந்த யான் அவர் தும்மியவுடன் தும்மியவர்க்குக் கூறும் ஆறுதல் மரபுப்படி அவரை நோக்கி "நீடுவாழ்க" என்று கூறுவேன் என்பது அவர் கருத்து. என்ன தந்திரம்? 'ஊடல் உவகை 25 என்பது வள்ளுவர் தந்த இன்பப் பாலின் 25-ஆம் அதிகாரம். காமத்துப்பாலின் இறுதி அதிகாரம், ஊடல் உவகையாவது, ஊடலால் கூடல் இன்பம் சிறத்தல் கண்டு மகிழ்ச்சி பெறுதல். இந்த உவகை காதலன் காதலி இருவர் மட்டும் நிலை பெறுகின்றது. ஐடலுவகைப் பாக்கள் அவ்விருவர் வாயினின்றும் வெளிவருகின்றன. இந்த அதிகாரத்தில் ஒரு குறள்: உணலினும் உண்டது அறல்இனிது; காமம் புணர்தலின் ஊடல் இனிது (246) 'உண்பதை விட உண்ட உணவு செரிப்பதே இன்பம் தருவது. அதுபோல் காமம் நுகர்வதிலும் இன்பம் தருவது ஊடலே. இக்கூற்றில் பேருண்மை அடங்கியுள்ளது. இது ஒரு பெரிய தத்துவத்தை விளக்கி நிற்கின்றது. உண்டது அற்றுப் போவதற்குமுன் மேலும் மேலும் போட்டுக் கொண்டிருப்பது உடம்பைப் பிணிப்புண்டாக்குவதாம். உண்பது இன்பம் தருவதுதான். எப்பொழுது? முன் உண்டது செரித்த பிறகுதான். உணவு சுவையாக