பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 83 இருப்பதற்காகச் செரிமானம் ஆகாதவன் உண்ணக் கூடாது. எனவே, உண்டது அறுவதிலேயே இன்பத்தைக் காண்டான் அறிஞன். மேலும் நன்றாக உண்பதற்குக் காரணமாக இருப்பது உண்டறுதல், அதுபோல, கலவி பருகுவதற்குக் காரணமாவது புலவி. எனவே காமம் புணர்தலின் ஊடல்' இனிதாகின்றது: இந்த அதிகாரத்தின் இறுதிக் குறள்கள் இரண்டும் முத்தாய்ப்பாக அமைந்து இன்பத்தின் கொடுமுடியை எட்டச் செய்கின்றன. வள்ளுவர் படைத்த காதற் செல்வி நிலவுப்பயன் நல்கும் நிலா முற்றத்தில் காதலனுக்குக் கலவியும் புலவியும் மாறிமாறி அளித்து அவனைக் களிப்புறுத்தித் தானும் களிப்புறுகின்றாள். அப்பெருமான் படைத்த காதற் செல்வனும் அவள் நலத்தைப் புனைந்து புனைந்து பாராட்டுகின்றான். எப்படி? ஊடுக மன்னோ ஒளியிழை; யாம்இரப்ப நீடுக மன்னோ இரா. (249) என்று தன் காதலியையும் இரவையும் இரந்து இரந்து அவளையும் இன்பக் கடலாட்டித் தானும் அக்கடலுள் கிடந்து திளைக்கின்றான். ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் (250) 'காமத்திற்கு இன்பம் தருவது ஊடல். அவ்வூடலை இன்பமாக முடிப்பது கூடி முயங்கல். கூடி முயங்கல் பெற்றாலொழிய ஊடல் இன்பம் தராது. ஊடல் இன்பம் தருவதுதான். எந்நிலையில்? கூடி முயங்கப் பெறுமானால். இந்தக் குறள் சடில்லாத இன்பப் பாடல். தமிழ்க்காதலர்க்கு, இதுவே வள்ளுவர் பெருமான் அளித்த இன்பக் கொடை இன்னோர் உண்மையையும் ஈண்டுச் சிந்திக்கலாம். இதுவே காமத்துப் பாலின் வள்ளுவர் குறளின்) இறுதிப்பாடல். 'அகர முதல எழுத்தெல்லாம் என்ற முதற் குறள் 'அ' எழுத்தில் தொடங்குகின்றது. இறுதிக் குறளாகிய இது கூடி