பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஆகிழ்க்கடல் ராயசொ முயங்கப்பெறின் என்று முடிவதால் 'ன்' எழுத்தில் முடிகின்றது. எனவே இது தமிழ் நெடுங்கணக்கின் "முற்றிலக்கியமாக அமைகின்றது என்று கொள்ளலா :ു?? வள்ளுவர் பெருமான் அளித்த இன்பப்பாலை நாம் எல்லோரும் பருகுவதற்கேற்ப அமுல்பாலாக்கி நம்மை மகிழ்வித்த தமிழ்க்கடலை வாழ்த்தி வணங்குகின்றோம். 2. திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி (1974)” திருக்கருவை என்பது கரிவலம்வந்த நல்லூர்" கருகாபுரி எனவும் வழங்கும். இத்தலத்து எம்பெருமான் பாலவண்ண தாதர் அவர்மீது அதிவீரராம பாண்டியரால் இயற்றப் பெற்றது பதிற்றுப்பத்து அந்தாதி. வேறுபட்ட பலவகையான பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்டு விளங்குவதால் பதிற்றுப் பத்து என்ற பெயராயிற்று. முன்பாடலின் முடிவை அந்தம் அடுத்த பாடலின் முதல் (ஆதி தொடர்வதால் அத்தாதி எனப் பெயர் பெற்றது. இந்நூல் தவிர, 'திருக்கருவை வெண்பா அந்தாதி, திருக்கருவை கலித்துறை அந்தாதி என்ற வேறு இரண்டு நூல்களையும் இயற்றியுள்ளார். இவ்விரண்டினும் முன்னதே சுவைமிக்கது: உன்னத்தை உருக்குவது. சொல்நயம் பொருள் நயம் மிகுந்து ஆற்றொழுக்கான இனிய கவிதை நடையில் நடைபெறுவது. இதனால் இது குட்டித் திருவாசகம் என்று தமிழ்ப்பெரு 15. வெளியீடு: அருள்மிகு சங்கர நாராயணகவாமி திருக்கோயில், சங்கநயினார் கோயில். 16. இத்திருத்தலம் இராசபாளையத்தினின்றும் சங்கர நாராயணர் கோயில் செல்லும் வழியில் சங்கரநயினார் கோயிலுக்குச் சில மைல்கள் முன்ன்ே உள்ளது. புகழ் பெற்ற சங்கர நயினார் கோயிலோடு இத்திருக்கோயில் சேர்த்து நிர்வகிக்கப் பெறுகின்றது. - இத்திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. பாண்டிய மன்னர் காலத்து இறுதியில் வாழ்ந்ததாகக் கருதப்பெறுகின்ற அதிவீரராம பாண்டியர் என்ற பெரும் புலவர் இப்பகுதியை ஆண்டதாகச் சொல்வர். இவர் ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணிப்பர் 藤鞑播感器态&辉。