பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 85 மக்களால் போற்றப் பெறுகின்றது. இந்நூலுக்குப் பொழிப்புரை எழுதியவர் தமிழ்க்கடல் இராய.சொ. "இதுவும் திருமுறையோ?” என்று ஐயம் எழச் செய்யும் இடங்கள் பல. இவை தவிர அதிவீரராம பாண்டியர் திடத நாட்டை ஆண்ட நளன் என்னும் அரசனது வாழ்வை விளக்கும் 'நைடதம் என்ற தலைப்பில் ஒரு காவியத்தையும் விருத்த யாப்பில் வடித்துத் தந்துள்ளார். 'வெற்றிவேற்கை அல்லது நறுந்தொகை என்ற ஒரு நீதிநூல் இவருடையது." - 'திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி ஒரு பக்தி துரல் என்று பாராட்டப் பெறுவதற்கு அடியிற் கண்ட ஒரு பாடலே பெரிய சான்றாக அமைகின்றது. உரகா பரணத் திருமார்பும் உமைஒப் பனையாள் இடப்புறமும் சிரமா லிகையும், புரிசடையும் செய்ய வாயும் கரைமிடலும், வரதா பயமும், மழுமானும், வயங்கு கரமும், மலரடியும் கருவள புரியான் வெளிப்படுதிக் காட்சி கொடுத்து நின்றானே" இப்பாடலில் அமைந்துள்ள சொல்லோவியம் சிவபெருமானின் திருவுருவத்தை நம் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது இல்லையா? இதனைப் போலவே வரதுங்கராம பாண்டியன் பாடிய தனிப்பாடல் ஒன்று உண்டு. அது இது: 17. இலக்கியம் இயற்றவல்ல புலவர்கள் நீதிநூலும் இயற்ற விரும்புதல் அக்கால வழக்கம் போலும். அதனால் குமரகுருபரர் ஒரு நீதிநூலும் சிவப்பிரகாசர் மற்றொரு நீதி நூலும் இயற்றியுள்ளனர். 18. திரு. கரு. பதிற். அந்தாதி - 9. உமை - பொதுப்பெயர். ஒப்பனை; கருகாபுரியில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் பெயர்.