பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தமிழ்க்கடல் ராயசொ அஞ்சல் என்ற கரதலமும் கணபணக்கங் கணமும் அரைக்கிசைந்த புலிஉடையும், அம்புலிச்செஞ் சடையும் கஞ்சமலர்ச் சேவடியும், கனைகழலும் சிலம்பும், கருணைபொழி திருமுகமும், கண்களொரு மூன்றும் நஞ்சைஉண்ட மணிமிடறும், முந்நூலும் மார்பும் நலத்திகழ்வெண் நீற்றொளியும், மறிமானும், மழுவும் பஞ்சடிச்சிற் றிடையுடையாள் ஒப்பனையா கமுமாய்ப் பால்வண்ணன் உளத்திருக்கப் பயமுண்டோ எமக்கே. இப்பாடலும் இறைவன் இறைவியின் திருக் கோலத்தை நம் மனக்கண்முன் நிறுத்துவதைக் கண்டு மகிழலாம். இனி, இந்நூலில் தயம் மிக்க சில பாடல்களையும் அவற்றிற்கு இராய.சொ. மேற்கோளுடன் காட்டும் நயம் மிக்க உரைக்குறிப்பையும் காட்டுவேன். () வேனில் சிலைவேள் தொடுகணைக்கும் விளங்கும் மகளிர் உளங்கவரும் பாணல் கொடிய விழிவலைக்கும் பற்றாய் வருந்தி. (4) என்ற நான்காம் பாடலின் பொழிப்புரைக்குப்பின் இராய.சொ.வின் உரைக்குறிப்பு: வேனில் வேள்கணை' என்ற திருவாசகப்பாடலைப் பெரிதும் தழுவியது இப்பாடல்' என்பது. வேனில் வேள்கணை கிழிந்திட மதிசுடு மதுதனை நினையாதே மாணி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் தேனி லாவிய திருவருள் புரிந்த என். (திருவா. திருச்சத. 40) என்ற பாடலை இப்பாடலுடன் ஒப்பிட்டுப் பயின்றால் தயம் விளங்கும்.