பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 87 (2) நடித்தேன் பொய்க்கூடு எடுத்து, அவமே தன்னால் கழிய, இந்நாளில் படித்தேன் உனது திருநாமம்; பண்டை வினையின் பற்றறுத்தேன்; பிடித்தேன் பிறவிக் கடல்நீந்தப் பெரிய புணையா உனது அடியை * * * * * * - * * - - + - - - * * * * (5) இதில் உள்ள உரைக்குறிப்பு: "பாலனாய்க் கழிந்த நாளும்” என்ற அப்பர் சுவாமிகள் தேவாரத்துடன் இப்பாட்டு ஒப்பிடத் தக்கது. இறைவனடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர்.' பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம் மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவோடு மூப்புவந்து கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோலில்லாது கெட்டேன் * ↔ 帥 * 綬 * ↔ * 始 * ■ * 帶 * * ↔ (அப்பர் தேவாரம் 4.64.9) இரண்டையும் ஒப்பிட்டு நோக்கினால் உண்மை தெளிவாகும். பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவனடி சேராதார் (குறள் - 10) இதனையும் நோக்கலாம். (3) முன்னைப் பிறவித் தவப்பயனோ ? முழுதும் அறியா மூடனிவன் என்னக் கருத்தில் எண்ணியோ ! யாதோ அறியேன், இரவுபகல் கன்னல் பாகில் கோல்தேனில் கனியில் கனிந்த கவிபாட (6) இதில் உள்ள உரைக்குறிப்பு: "பத்தனாய்ப் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடல்