பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தமிழ்க்கடல் ராயசொ பயில்வித்தான்" என்ற அப்பர் சுவாமிகளின் கருத்து ஒப்பு நோக்கத்தக்கது. "கன்னல் பாகில் கோல் தேனில் கனியில் கனிந்த கவி" என்து தம் கவியைக் கூறுவது இவ்வாசிரியரின் பெரு மிதத்தைக் காட்டுகின்றது. (4) ஆண்ட குரவன் ஆவானை அல்லல் பிறவி அறுத்தானை வேண்டும் பதவி தருவானை வெளிவிட்டு இன்பம் அளிப்பானை + 4 + 4 + s = - + F * * * * * (7) இதன் குறிப்புரை: "அல்லல் பிறவி அறுப்பானே ஒ” என்பது திருவாசகம். சிவபுராணத்தில், அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 91-92) என்ற அடிகளுடன் ஒப்பிட்டு நோக்கினால் ஒப்பு தெளிவாகும். ஒ என்உயிர்க்கு உயிராய் எள்ளும் எண் ணெயும்போல் எங்கனும் இடையறா நின்றான் எவன்.அனைத்து உலகும் என்றுகாத் தழிக்க இறைமைசால் மூவுருவு எடுத்தான் எவன்முதல் இடைஈறு இன்றிஎஞ் ஞான்றும் ஈறிலா மறைமுடி இருப்பான் அவன்னனைப் புரக்கத் திருக்களா நீழல் அமர்த்தருள் புரிந்தனள் உளனே. (16) இதன் உரைக்குறிப்பு: இப்பாடல் 'உயர்வுற.மதிநலம்' என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தின் கருத்தைத் தழுவியது. உயர்வுஅற உயர்நலம் உடையவன் எவன் ?அவன் மயர்வுஅற மதிநலம் அருளினன் எவன் ?அவன்