பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் , 89 அயர்வுஅறும் அமரர்கள் அதிபதி எவன் ?அவன் துயர்அறு சுடர்அடி தொழுதெழு மன்னே (1.1:1) என்பது திருவாய்மொழியின் முதல் பத்தின் முதற்பாசுரம். இந்த இரண்டையும் திரும்பத் திரும்பப் படித்தால் கருத்தும் சொற்போக்கும் ஒன்றுபோல் இருப்பதை அநுபவித்து உணர்ந்து மகிழலாம். (6) காரணம் ஏதென அறிகிலேன் தமியேன் கல்தரு மனத்தினைக் கரைத்து வார்.அணி முலையாள் ஒப்பனை யோடு மழுவிடை மேல்எழுத்து அருளி * * * - - a to - - - - - is a - - - (17) இதன் உரைக்குறிப்பு: "கல்லைப் பிசைந்து கனியாக்கி" என்பது திருவாசகம். கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி. . . (திருவா. திருவம்மானை 5) இரண்டிலுள்ள கல்லைப் பிசைந்து கனியாக்கி என்ற தொடர்களை மீட்டும் மீட்டும் படித்து கல்லைக் கனியாக்கும் வித்தையை அநுபவித்து மகிழலாம். () பெறுவது நினது திருவடிக் கமலம், பேசுவது உன்திரு நாமம் உறுவது நினது திருஉரு வெளியாம் உணர்வதுஉன் அருள்;அலாது உண்டோ? மறுஅறு சிறப்பின் மாகஇலா மணியே!

  • * * * * * * - - -a as * * * (19)