பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 0 93 என் விளக்கம்: "இவ்வுலக வாழ்வில் ஆன்மா ஆணவத்துடன் கூடியுள்ளது என்பதை நீ அறிவாய். ஆனால் அந்த உறவில் உறவு கொண்டவற்றுள் ஒன்றும் அறிவதில்லை. அதைப் போன்றே முத்தியிலும் ஆன்மாவும் இறைவனும் நெருங்கிக் கூடியுள்ளனர். ஆனால் அவர்களில் ஒருவருக்கும் இழப்பில்லை. அவர்தம் தனி இன்பமிகு மதிப்பும் மாறாமல் அப்படியே உள்ளன. இதைச் சித்தாந்திகள் "பசு பாசத்தில் அருந்தி நிற்கும் நிலை பெத்தம், அது பதியில் அழுந்தி நிற்கும் நிலையே முத்தி" என்று விளக்குவர். இந்த அத்துவிதக் கலப்புக்குத் தமிழில் தாள்', 'தலை என்று இரு சொற்களின் புணர்ச்சியை எடுத்துக் காட்டாகக் கொள்வது மரபு. தலை ஆன்மாவையும் தாள் இறைவனையும் குறிப்பனவாகக் கொள்ள வேண்டும். அஃதாவது இறைவனது திருவடிகளில் ஆன்மாவின் தலை பொருந்து கின்றது என்பதே இதன் கருத்தாகும். தாளும் தலையும் தமிழ் இலக்கணப்படி புணரும்போது தாடலை என்றாகும். ‘தாள்' என்பதிலுள்ள 'ஸ் மறைய, "தலை'யிலுள்ள த', ட' ஆக மாறித் தாடலை ஆகின்றது. இதனை இரு சொற்கள் எனக் கொள்ளவும் முடியாது: ஒருவிதத்தில் இஃது ஒரு சொல்: இன்னொரு விதத்தில் இருசொல். இதைப் போன்றதே இறைவனோடு ஆன்மாஜத்தியப்படும் விதமும் என்பதே சித்தாந்தத்தின் முடிவாகும்." (2) சிந்தனை உனக்குத் தந்தேன், திருவருள் எனக்குத் தந்தாய்; வந்தனை உனக்குத் தந்தேன்; மலரடி எனக்குத் தந்தாங் பைந்துணர் உனக்குத் தந்தேன் பரகதி எனக்குத் தந்தாய் கந்தனைப் பயந்த நாதா ! கருவையில் இருக்கும் தேவே! (63) 25. சைவசமய விளக்கு - பயனியல் கடிதம் - 43 (பக் 331)