பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 95 என்பது சரியான பாடல். இரண்டு பாடல்களையும் ஊன்றிப் பலமுறைப் படித்து அநுபவித்தால் ஒப்புமையில் நம் மனம் ஒன்றும்; இறையதுபவத்திலும் தம் மனம் ஆழங்கால் படும். இவற்றிலிருந்து ஒர் உண்மை நமக்குப் புலனாகின்றது. பேராசிரியர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் போன்று நம் தமிழ்க்கடல் தம் மனக்கடலி லிருந்து நினைவாக இப்பாடல்களை மேற்கோள்களாக ஒப்புமை காட்டுவார். முன்னவர்களின் உரைகளில் பாட்டெண், அடியெண் முதலியவை காட்டப் பெறாதவை போல இவர்தம் உரையிலும் அவை காட்டப் பெறாதவாறு அமைகின்றது. இத்துடன் தமிழ்க்கடலின் உரைநயம், ஒப்புமை நயம் முதலியவற்றைக் காட்டுவதை நிறுத்தி இந்தக் குட்டித் திருவாசகத்தில் நவமணி போல் நான் கண்ட ஒன்பது பாடல்களைக் காட்டுவேன். f. உருவாகி நிற்றி, அருவாகி நிற்றி, உயிரோடும் வைக்கும் உறவாய் மருவாகி நிற்றி, லாகி நிற்றி, மறையாகி நிற்றி; மறையின் பொருளாகி நிற்றி உனையான்அ றிந்து புகழ்கின்ற வாறும் அறியேன் கருவா புரிக்குள் உறைதேவ தேவ ! கதியேதுன் ணக்கு மொழியே (52) 2. முத்திக்கு வித்துஉன் அடியார்கள் சிந்தை முளரிக்குஅ ருக்கள்; மொழிஎண் சித்திக்கு மூலம்; தவயோகி கட்குத் தெளிகன்னல் ஊறும் அமிர்தம், பக்திக்கு நித்தம் அருள்வீக கொண்டல்; களவீசன் எங்கள் பரமன் அத்திக்கு முன்னம் வரமே.அ வரித்த கருவேசன் அம்பொன் அடியே 54)