பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 97 7. உத்தி வாளரா முடிந்தபால வண்ணனே ! உனது பத்தி வேண்டுவது அன்றியே நரகிடைப் படினும் முத்தி வேண்டிலேன், துறக்கமும் வேண்டிலேன்; முனிவர் சித்தி வேண்டிலேன்; வேண்டினேன் திசாதிபர் சிறப்பே (88) 8. சிறக்கத் தக்கது கருவையான் திருவடி நேயம்! மறககத தககது மறறுள் சமயத்தின் மயக்கம்; துறக்கத் தக்கதுஇன் உடம்பை,யான் என்றுறு தொடர்பு; பிறக்கத் தக்கது சிவானந்த வாரியின் பெருக்கே (89) 9. ஐய னே! சரண் போற்றி என்னையாள் அப்ப னே சரண் போற்றி பொய்யிலா மெய்ய னே சரண் போற்றி! வானவா வேந்தனே! சரண் போற்றி! மான்மழுக் கைய னே சரண் போற்றி ! காலனைக் காய்ந்த வா சரண் போற்றி! நீநிறச் செய்ய னே சரண் போற்றி ! காமனைச் செற்ற வா!சரண் போற்றி! தேவனே (97) என்பன இந்த நவமணிகள். குட்டித் திருவாசகத்திலுள்ள இவை திருவாசகப் பாக்கள்போல் என்பையும் உருக்கும் தன்மையன என்பதைப் பக்தியுடன் படிப்போர் அறிவர். செட்டிநாட்டுப் பகுதியில் நவமணி மோதிரத்தைத் தரித்துக் கொள்பவருக்கு நவக்கிரகத்தைத் தொல்லை இராது என்று நம்புபவர்கள் உளர் என்பதை யான் அறிவேன். இந்த ஒன்பது பாசுரங்களை உளம் உருகி ஒதுபவர்கட்கு முத்தி - வீடுபேறு - உறுதி என்பதை நம்புவோம்.