பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

98 திருமுக்கூடல் : காவிரியில் கபினி (கபிலை) என் ணும் ஆறு கலக்கும் இடம் இது. இங்கே ஒரு தடாகமும் கலப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் இந்த இடத்திற்குத் திருமுக்கூடல் என்ற பெயர் வழங்கப்படு இன்றது. இங்கே அகத்தியேச்சுரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் மண்ணால் ஆனது. சிவசமுத்திரம் : இது காவிரியின் இரண்டாவது அரங்கமாகும். இது (சுமார்) 5 கி.மீ. நீளமும் (சுமார்) ஒன்றரை கி. மீ. அகலமும் உள்ள அரங்கம் ஆகும். இங்கே சிவனுக்கும் திருமாலுக்கும் கோயில்கள் உண்டு. மொத்தம் நான்கு கோயில்கள் ஈண்டு உள்ளன. ககன துக்கி அருவி. பருசுக்கி அருவி எனக் காவிரி இரண்டாகப் பிரிந்து மீண்டும் கூடுவதால் இந்தப் பகுதி அரங்கம் எனப் படுகிறது. முதல் அருவி 300 அடி உயரத்திலிருந்தும் இரண்டாம் அருவி 230அடி உயரத்திலிருந்தும் கீழே விழு கின்றன. - சோமநாதபுரம் : இங்கே பிரசன்ன சென்ன கேசவ ஆலயம் என்னும் கோவில் உள்ளது. மிகவும் சுவைத்து மகிழக்கூடிய சிற்பக் கலேக்குப் பெயர் பெற்றது இப்பகுதி. இராமநாதபுரம் :- கருநாடகத்தில் உள்ள இராம நாதபுரம் இது. (தமிழ்நாட்டிலும் இந்தப் பெயரில் ஒரு நகரம் உள்ளது). குடகு நாட்டு எல்லைக்கு அப்பால் 32 கி.மீ. தொலைவில் இந்த ஊர் உள்ளது. இவ்வூரும் கோயில் பெருமை உடையதாகும். மேக தாட்டு: மேக என்றால் ஆடு. ஆடு தாண்டும் அளவுக்குக் காவிரி குறுகி விட்ட இடம். இந்த இடத்தை அடுத்துக் காவிரி தமிழ்நாட்டு எல்லைக் குள் புகுகிறது.