பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

111 குடகு மைசூர் நகருக்குத் தென்மேற்கே உள்ளது. இது ஒரு மலை நாடு; பழைய சென்னை மாநிலத்தின் ஓர் எல்லையாகவும் கூறலாம், 9-10 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் தழைக் காட்டுக் கங்கர் குலமன்னர்களால் ஆளப்பட்டது. பின்னர், சோழர், ஒய்சளர், விசயநகர அரசர்கள், பிதனூர் அரசர்கள் முதலியோர் அடுத் தடுத்து ஆண்டனர். 1834 ஆம் ஆண்டளவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் நாட்டைப் பிடித்துக் கொண்டனர். இந்தியா உரிமை பெற்ற பிறகு, இந்தியக் குடியரசின் சி பிரிவு அரசாக இருந்த குடகு நாடு. இந்தியாவில் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது -அதாவது-1956 நவம்பர் முதல் நாள் கன்னடம் பேசும் மைசூர் நாட்டுடன் இணைக்கப்பட்டது. இதன் பரப்பளவு 1586 சதுர மைல் ஆகும். மக்கள் தொகை ஏறக்குறைய மூன்று நூறாயிரம் எனலாம். செழிப்புள்ள காடுகளும் ஆழமான பள்ளத்தாக்குகளும் ஈங்கு உண்டு. காஃபி உற்பத்தியில் சிறந்தது. உழவே முதன்மையான தொழில். ஈண்டு மழை வளம் மிகுதி. இந்நாட்டின் தலைநகர் மெர்க்காரா' என்பது. பல்வேறு பழங்குடி மக்கள் இங்கே வாழ்கின்றனர். அவர்களுள் குடகர்கள் முதன்மையானவர்கள். போர் வீரர்களாகத் திகழ்ந்த இவர்களின் தொழில் வேட்டை யும் உழவுமேயாகும். குடகுமொழி பேசும் குடகர்களே யன்றி, துளு மொழி பேசும் கவுடர்களும் இருக்கின்றனர் இங்கே. - - குடகு நாட்டின் தாய்மொழியாகிய குடகு மொழி, தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்பு உடைய பழங் கன்னட மொழியின் ஒரு பிரிவாகும். இம்மொழி மலையாளத்திற்கும் கன்னடத்திற்கும் இடைப்பட்ட