பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

120 எந்த மொழியும் முதல் முதலாக எழுதப்படும் போது மக்கள் எவ்வாறு பேசினார்களோ அவ்வாறே எழுதப்படும் என்பது ஒரு பொதுக் கருத்து. எனவே, கன்னட மொழி, முதல் முதலில் எழுதப்பட்டபோது, கொச்சைத் தமிழ்ச் சொல்லாகிய பேச்சு வழக்குத் தமிழ்ச் சொல்லைத் தனது எழுத்து வழக்குச் சொல் லாகக் கொண்டு எழுதப்பட்டது என்பது புலனாகும். இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் பெரிய இலக்கிய"இலக்கண நூல்கள் எழுதப்பட்டு விட்டன. ஆனால், கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் நூல். கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 'கவிராஜ மார்க்கம் என்னும் நூலாகும்-என்று சொல்லப்படுகிறது. மற்றும், இந்நூலின் ஆசிரியர் இராட்டிர கூட மன்னனான நிருப துங்க அமோக வர்ஷன் (814-877) என்று சிலர் கூறுகின்றனர்; வேறு சிலர் அம்மன்னனின் அவைக்களப் புலவர் எழுதியதாகக் கூறுகின்றனர். ஒரு வேளை, அவைக்களப் புலவர் அரசன் பெயரால் வெளியிட் டிருக்கலாமோ என்னவோ! - இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே சங்கப் பாடல் களில் தமிழ்க் காவிரி மிகப் பரவலாகப் பேசப்பட் டுள்ளது. கவி ராஜ மார்க்கம்' என்னும் வடமொழிப் பெயர் கொண்ட முதல் நூலே ஒன்பதாம் நூற்றாண் டில் எழுதப்பெற்ற கன்னட மொழியில், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் காவிரி எவ்வாறு குறிப்பிடப்பட் டிருக்குமோ தெரியவில்லை. காவிரியின் தொடக்க இடமே தலைக் காவிரி என்னும் தமிழ்ப் பெயர் கொண்டுள்ளது.