பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

122 'பொகெ' என வழங்லப்படும். சரி-'கை' என்பது கெ’ என்றாயிற்று: 'பு' என்பது பொ' ஆனது எப்படி என்ப தையும் காண வேண்டும்: - 'உ' என்பதோ, அல்லது, மெய்களின்மேல் 'உ' ஏறிய உயிர் மெய் எழுத்துகளாகிய கு.சு,து,து,பு,மு என்னும் மொழி முதலில் வரும் எழுத்துகளுள் ஒன்றோ ஒரு சொல்லின் முதல் எழுத்தாக இருக்க வேண்டும். அச் சொல்லின் இரண்டாவது எழுத்தாக, மெய்யெழுத்து களின் மேல் அ, ஆ, ஐ ஏறிய உயிர்மெய் எழுத்துகளுள் ஏதாவது ஒன்றிருப்பின், மொழி முதலில் உள்ள உ’ என்பது பேச்சு வழக்கில் ஒ எனத் திரியும். இது கொச்சை உருவமாகும். எழுத்து வழக்கில் இவ்வாறு திரியாது. சில எடுத்துக்காட்டுகள் வருமாறு : உழவு = ஒழவு, உலாத்துதல் = ஒலாத்துதல், உடை = ஒடெ, குழவி=கொழவி, குழாய்=கொழா, குழை = கொழெ, சுடலை = சொடலெ, சுறா = சொறா சுனை = சொனெ, துடை= தொடெ, துலாம் = தொலாம், துணை = தொணெ, நுகத்தடி = நொகத்தடி, நுணா= நொணா, நுரை= நொரெ, புலம்பு = பொலம்பு, புறா = பொறா, புகை = பொகெ, முழம் =மொழம், முலாம்= மொலாம், முனை = மொனெ-இவ்வாறு இன்னும் பல காட்டலாம். இத்தகைய பேச்சு வழக்காற்றின்படி புகை' என்பது பொகெ’ என்றாயிற்று. கன்னடத்தில் பொகெ என்று தானே இருக்க வேண்டும். ஹொகெ என்றிருக் கிறதே-என்று வினவலாம். இதிலே ஒரு திரிபு உள்ளது. தமிழில் உள்ள பகர வரிசை எழுத்துகள் கன்னடத்தில் ஹகர வரிசை எழுத்துகளாக மாறும். இதற்கு உரிய எடுத்துக்காட்டுகள் சில வருமாறு :