பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

126 இரு மொழிகளில் உள்ளது. முதல் பகுதி சம்ஸ்கிருதத் திலும் இரண்டாம் பகுதி பழைய கன்னடத்திலும் உள்ளது. (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழாகவே இருக்கும். சம்ஸ்கிருதப் பகுதியில் துர்வி நீதன் தன்னை கொங்கணி விருத்தராஜன் (ரீமத் கொங்கணி விருத்தராஜனே துர்வி நீத நாமதேயன்). என்று குறிக்கிறான். இதே பகுதியைக் கன்னடத்தில் கூறும்போது பூர் கொங்கணி முத்தர சரு” என்று கூறுகிறான, இதிலிருந்து முத்தரசர் என்ற சொல்லுக்கு நேர் சம்ஸ்கிருதச் சொல்லாக விருத்தராஜன் என்ற மொழி பெயர்ப்பு உள்ளது. ஆதலின் முத்தரசர் என்ற சொல் மூத்த குடி என்பதன் பெயரே. உண்மையில், முதுஅரசர் என்பதே முத்தரசர் என்று வந்துள்ளது. முத்தரசர் என்று குறிக்கப்படும் துர்விநீதன் முதுகுடியைச் சேர்ந்த வன். இது போல கி. பி. 7-ம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் சிவமாறன் என்ற கங்க மன்னனும், 8-ம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் பூரீ புருஷன் என்பவனும் சம்ஸ்கிருதப் பகுதியில் 'விருத்தராஜா” என்றும் கன்னட பகுதியில் முத்தரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர்; ஒன்று அல்ல, இரண்டு அல்ல,பல கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கங்கர்களை முத்தரசர் என்று அரசப் பட்டயங்கள் குறிக்கின்றன. இதிலிருந்து முத்தரையர் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்றும், கங்க அரசர்களே முத்தரையர் என்றும் தெளிவாக்கப் பட்டுள்ளது. முது பெரும் வேளிர் கங்கர் இந்தச் சங்க மன்னர்கள் தம்மை ஏன் முத்தரையர் என அழைத்துக் கொண்டனர்? கொங்கணி கங்க அரசர் களின் வரலாற்றை எழுதுபவர்கள் கி.பி.4ம் நூற்றாண்டி