பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

4. காவிரியின் நிலநூல் வரலாறு முன்னர்க் காவிரியின் புராண வரலாறு பார்க்கப் பட்டது. புராண வரலாறு அனைவராலும் நம்ப (լք ւդயாதது. ஆனால், நில நூல் (பூகோளம்) முறைப்படி எழுதப்பட்டுள்ள் வரலாற்றை யாரும் நேரில் கண்டு சரி பார்த்துக் கொள்ளலாம். நம்பவும் முடியும். இங்கே அது தரப்படும் : - தமிழ்நாட்டிற்கு ேம ற் ேக உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் குடகு தாட்டுப் பகுதியில் சையம் என ஒரு மலை உள்ளது. இந்த மலையிலிருந்துதான் காவிரி ஆறு சுரந்து தோன்றுகிறது. இதன் தொடக்கப் பகுதியில் முப்பது சதுரஅடி அகலமும் இரணடரை அடி ஆழமும் கொண்ட குளம் ஒன்று உள்ளது. இதிலிருந்து நீர் பலவாறு பிரிந்து வெளியேறுகிறது. இந்த இடம் தலைக்காவிரி எனப் பெயர் வழங்கப்படுகிறது. இங்கே காவிரித் தாய்க்குச் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. நீர் காடு மலைகளைக் கடந்து சென்று பாக மண்டலம் என்னும் இடத்தில்தான் ஆறு என்னும் வடிவம் பெறு கிறது. திப்பூர் என்னும் இடத்தில் ஃஏமாவதி என்னும் சிற்றாறும், பைரபூர் என்னும் இடத்தில் இலட்சுமண தீர்த்தம் என்னும் சிற்றாறும் காவிரியுடன் கலக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/22&oldid=1018897" இலிருந்து மீள்விக்கப்பட்டது