பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

5. பெயர்க் காரணம் காவேரி-காவிரி கவேரன் மகள் காவேரி என்பதாகக் காவிரிக்கு ஒரு பெயர்க் காரணம் கூறப்படுகிறது. காவேரி என்பதைப் பெயராகக் கொண்டு இவ்வாறு கூறப்படுகின்றது. தமிழ்-தெலுங்கு-கன்னடம்-மலையாளம் ஆகிய பகுதி களில் உள்ள பல ஊர்ப் பெயர்களும் மக்கள் பெயர் களும் மற்ற மற்ற பெயர்களும் திராவிடச் சொற் களாக இல்லாமல் ஆரியச் சொற்களாக இருப்பது அனைவரும் அறிந்த செய்தியே. மாயூரத்தை மயிலாடு துறையாக மாற்றப் பட்ட பாடு போதுமே. - காவேரி என்ற பெயர் கொள்ளாமல், காவிரி என்ப தைப் பெயராகக் கொண்டு, காவிரி ஆறு என்றால், (கா = சோலை) சோலைகளை விரித்து வளம் பெறச் செய்யும் ஆறு என்று சிலர் பொருள் கொள்வர். மற்றும் ஒன்று: அகத்தியரின் கமண்டலத்தைக் காகம் கவிழ்த்ததால் உண்டான ஆறு ஆதலின் இதற்குக் 'காகவிரி என்னும் பெயர் சூட்டப்பட்டது. பின்னர் அது, காகவிரி-காகவிரி-காவிரி என்றாகிவிட்டது-என்பதாகக் கூறுவர் சிலர். கந்த புராணத்திலும் இந்தக்குறிப்பு உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/28&oldid=1018906" இலிருந்து மீள்விக்கப்பட்டது