பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

கதிர் பரப்பும் ஞாயிறு கிழக்கே மட்டுமன்றி நான்கு திசைகளிலும் தோன்றினாலும், வடக்கே இருக்க வேண்டிய வெள்ளி தெற்கே செல்லினும் - அதாவது கோள் நிலையில் எந்த மாறுபாடு தோன்றினும்-சோழ நாட்டுக்குத் தண்ணீர்த்தட்டுப்பாடு இல்லாமல் காவிரி யாறு நாடு முழுதும் நீர் ஊட்டுவதனாலே, வேலின் தோற்றம்போல் கரும்பு தோன்றும் சோழ நாடே நாடு எனப்படும் - என்பது பாடலின் கருத்து. சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வள வனைக் கோவூர் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் (386) வருக! - "குணதிசை நின்று குடமுதல் செலினும் குடதிசை நின்று குணமுதல் செலினும் வடதிசை நின்று தென்வயிற் செலினும் தென்திசை நின்று குறுகாது நீடினும் யாண்டு நிற்க வெள்ளி,யாம் - வேண்டிய துணர்ந்தோன் தாள்வா ழியவே (22-27) வெள்ளி என்னும் கோள் (சுக்கிரன்) கிழக்கேயிருந்து மேற்கே செல்லினும், மேற்கே யிருந்து கிழக்கே சென் றாலும், வடக்கேயிருந்து தெற்கே சென்றாலும், இருக்கக் கூடாத தென் திசையை விட்டு அப்பால் செல் லாமல் அங்கேயே நீண்ட நாள் இருப்பினும், (கோள் மாறுபட்டதால் மழை வளம் குன்றினும்) எமக்கு வேண்டிய வளத்தை உணர்ந்து வழங்கும் சோழன் தாள் வாழ்க - என்பது பாடல் கருத்து. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நல்லிறையனார் பாடிய பாடல் பகுதி வருமாறு (393):

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/35&oldid=1018918" இலிருந்து மீள்விக்கப்பட்டது