பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38 மழை பொழியா நாளிலும் நீர் தேங்கி வழங்கும் காவிரி நாடன் சோழன் - கருத்து. 'ஆறே, காலம் அறிந்து உதவும் காவிரி தானே” - - (திவாகரம்) தண்ணிர் வேண்டும் காலம் எல்லாம் அறிந்து காவிரி உதவும் - கருத்து. 'பூந்தண் பொன்னி எந்நாளும் பொய்யா தளிக்கும் புனல் நாடு” - (பெரிய புராணம் - சண்டேசுவர நாயனர் . 1251) பொன்னி என்னும் காவிரி பொய்க்காது எக் காலத்திலும் நீர் வழங்கும் நாடு சோழ நாடு - கருத்து. 'வாழிய மண்டல மால்வரை வாழி குடக் கோழி மாநகர் வாழிய வற்றாத காவிரி வாழி வரராச ராசனே'. (ஒட்டக் கூத்தரின் தக்கயாகப் பரணி. 812 - வாழ்த்துப்பகுதி) என்றும் வற்றாத காவிரி வாழ்க - கருத்து. வேற்றாத பொன்னி நதி" - ஒட்டக் கூத்தரின் - குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ் -15 "பொய்யாத பொன்னிப் புது மஞ்சனம் ஆடி'"பிழையாத் பொன்னித் துறைவன் பொலன்தார்' - (ஒட்டக் கூத்தரின் விக்கிரம சோழன் உலா -81- 520) அடுத்து, வில்லி பாரதம்- ஆரணிய பருவம் - அருச்சனன் தவநிலைச் சருக்கத்தில் உள்ள 24 ஆம் பாடல்:- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/40&oldid=1018925" இலிருந்து மீள்விக்கப்பட்டது